Asianet News TamilAsianet News Tamil

அனிருத்தால் அதிக விலை போன கமல் பட இசை ....சோனி மியூசிக் கனவு நிறைவேறுமா?

கமல் நடித்து வரும் விக்ரம் பட இசை வெளியீட்டு உரிமையை பிரபல சோனி ம்யூசிக் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது.

Sony Music acquires Vikram music rights
Author
Chennai, First Published Nov 6, 2021, 5:14 PM IST

தனுஷின் 3 படத்தின் மூலம்  இசையமைப்பாளராக அறிமுகமாகிய அனிருத் சில ஆண்டுகளில் திரையுலக பிரபலங்களையும், தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர். இவரின் திரைப்பயணத்தில் இவர் பிலிம்பேர், விஜய் தொலைக்காட்சி விருது, எடிசன் விருது என பல விருதுகளை இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் பல விருதுகளை பெற்று புகழ்பெற்றுள்ளார்.

தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அஜித், ரஜினி, சூர்யா என முன்னணி திரை பிரபலங்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத்  சமீபத்தில் வெளியான  டாக்டர் படத்திற்கு இசை வடிவம் கொடுத்திருந்தார். இதன்  பாடல்கள் வெளியான  சில தினங்களிலேயே 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருந்தது. சிவகார்த்திகேயன் வரிகளில்  வெளியான செல்லம்மா பாடல் இளைஞர்களை கவர்ந்திழுத்த பாடலாக வெற்றி பெற்றது.

Sony Music acquires Vikram music rights

இந்நிலையில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசிலை வைத்து மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். ரிலீசுக்கு தயாராகி வரும் இந்த படத்தின் பாடல்களை வாங்க பிரபல நிறுவனங்கள் போட்டியிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த போட்டியில் ஒரு வழியாக வெற்றியடைந்த சோனி ம்யூசிக் நிறுவனம் அதிக தொகை கொடுத்து விக்ரம் பட பாடல் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே உலக  நாயகன் கமலின் பிறந்த நாளை முன்னிட்டு விக்ரம் படத்திலிருந்து சினிக் பிக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பட ரிலீசுக்கு முன்னரே தனது இசையால் டைட்டிலை வெற்றியடைய செய்த அனிருத்தின் இசை  கமலின் விக்ரமுக்கும்  கை கொடுக்கும் என்னும் நம்பிக்கையில் பல லட்சம் கொடுத்து உரிமையை வாங்கியுள்ள சோனி நிறுவனத்திற்கு இந்த முறை அதிர்ஷ்டம் கொட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios