உண்மையான வலிமை தாயை பார்க்க நீங்கள் வெளி உலகத்திற்கு வரவேண்டும். ஏழை தாய்மார்கள் இவரை விட கடின உழைப்பாளிகள். என்பது போன்ற கமெண்டுகளை அள்ளி விட்டு வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவ என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்தது. தங்களது மகனுக்கு வாயு என பெயரிட்டுள்ளார். இது குறித்தான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சோனம் பகிர்ந்திருந்தார். அதோடு குழந்தை பிறந்த இரண்டு மாதத்திற்குள் அவர் தனது பணிக்கு திரும்பி விட்டார். சோனம் கபூர் தற்போது 'பிளைண்ட்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதனை ஷோம் மகிஜா இயக்குகிறார். இந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சோனம் கபூர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த வீடியோவில் மேக்கப் குழுவுடன் இருக்கிறார் சோனம். சூட்டிங்கிற்காக தயாராகி வரும் சோனம் தனது குழந்தைக்கு பாலூட்டிய படி அமர்ந்துள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்து, "எனது அணியுடன் நிஜ உலகில் திரும்பி வருவது, உடை அணிவது மற்றும் மக்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது சொந்த மைதானத்தில் மீண்டும் இருப்பதை விரும்புகிறேன். லவ் யூ மும்பை" என்று எழுதியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...ஹாலிவுட் நாயகி ரேஞ்சுக்கு மாறிய ராஷ்மிகா...நியூ லுக் இதோ
மேலும் செய்திகளுக்கு...குட்டி டவுசரில் பட்டனை அவிழ்த்து விட்டு பீச்சில் அல்ட்ராசிட்டி செய்யும் நடிகையின் டான்ஸ் வீடியோ இதோ
இந்த பதிவிற்கு அவரது கணவர் வலிமையான தாய் என கமெண்ட் செய்திருந்தார். அதேபோல அவரது நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அனால் நெட்டிசன்களோ வேறுமாதிரியான ரியாக்சன் கொடுத்து வருகின்றனர். உண்மையான வலிமை தாயை பார்க்க நீங்கள் வெளி உலகத்திற்கு வரவேண்டும். ஏழை தாய்மார்கள் இவரை விட கடின உழைப்பாளிகள். இது போன்ற முட்டாள் தனத்தை ஊக்குவிக்காதீர்கள் என்பது போன்ற கமெண்டுகளை அள்ளி விட்டு வருகின்றனர்.
