தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். சூப்பர் ஸ்டார் மருமகன் என்பதையும் தாண்டி தனக்கென தனி ஸ்டைல், தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். தமிழில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனுஷுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. நடிகர் என்ற வட்டத்திற்குள் மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தனுஷுன் அசத்திய நடிப்பு திறமைக்கு தீனி போடும் விதமாக சமீபத்தில் வெளியான திரைப்படம் அசுரன். 

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டீஜே உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. 100 நாட்கள் வரை ஓடிய இந்த திரைப்படம் 100 கோடி வரை வசூல் செய்தது. சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி என்பவரது வெக்கை நாவலின் தழுவலாக எடுக்கப்பட்ட அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

பஞ்சமி நில பிரச்சனையை அடிப்படையாக எடுக்கப்பட்ட இந்த படம் தமிழக அரசியலிலும் சர்ச்சயை கிளப்பியது. முரசொலி அறக்கட்டளைக்கு சொந்தமான நில விவகாரம் தொடர்பாக  பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் ஸ்டாலின் இடையே ட்விட்டரில் போரே வெடித்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அசுரன் திரைப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய டாப் ஹீரோக்கள் போட்டா, போட்டி போட்டனர். 

 

இதையும் படிங்க: சிம்புவிடம் இருந்து நயன்தாராவிற்கு தொற்றிய பழக்கம்... அப்போ கும்முனு ஆனதுக்கு இதுதான் காரணமோ?

தற்போது தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள அசுரன் திரைப்படத்தில் வெங்கடேஷ், பிரியாமணி நடித்து வருகின்றனர். கன்னட ரீமேக்கில் சிவராஜ் குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தை சீன மொழியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக மிகப்பெரிய நிறுவனம் ஒன்று அசுரன் பட தயாரிப்பாளர் தாணுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். 

 

இதையும் படிங்க: யுவனை மதம் மாற்றினேனா?... ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய இளையராஜா மருமகள்...!

இதற்கு முன்னதாக தனுஷின் மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.O திரைப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆன நிலையில், மருமகன் தனுஷின் அசுரன் திரைப்படம் நேரடியாக சீன மொழியில் ரீமேக் செய்யப்படும் அளவிற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.