தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை  எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். தோல்வி தான் வெற்றிக்கு முதற்படி என்பார்கள்.

இதையும் படிங்க: “காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பிருக்கு?... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...!

ஆம்... நயன்தாரா அடுத்தடுத்து சந்தித்த காதல் தோல்விகளும், நம்பிக்கை துரோகமும் தான் இப்படி விஸ்வரூப வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மாறியுள்ளது. சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சிம்பு - நயன்தாரா காதலித்து வந்த சங்கதி அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. அதன் பின்னர் சிம்பு - நயன்தாரா காதல் முறிந்தது. 

இதையும் படிங்க: யுவனை மதம் மாற்றினேனா?... ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய இளையராஜா மருமகள்...!

இது எல்லாம் தனிக்கதை தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, ஒருநாளைக்கு 24 மணி நேரம் போதாமல் பிசியாக சுற்றி நடித்து வருகிறார். இதற்கு முன்பு சிம்புவை காதலித்த போது நயனுக்கு அவரிடம் இருந்து ஒரு பழக்கம் தொற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பார்க்க ரொம்ப ஸ்ட்ரிக்டாக டையட்டை பின்பற்றும் நபர் போல் தெரியும் நயனுக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியமாம். என்ன தான் ஆடம்பரமான நட்சத்திர ஓட்டலுக்கு சாப்பிட போனாலும் நயனின் பட்டியலில் முதலில் இடம் பிடிப்பது பிரியாணி தானாம். அதுவும் ஐதராபாத் தம் பிரியாணி என்றால் ஒரு கை பார்த்துவிடுவாராம்.

இதையும் படிங்க: “இந்து மதத்தை விமர்சிக்க எவனுக்கும் அருகதை இல்ல”... காட்மேனுக்கு எதிராக கொதித்தெழுந்த எஸ்.வி.சேகர்...!

அதுக்கும் சிம்புவிற்கு என்ன சம்பந்தம் என்றால் எஸ்.டி.ஆருக்கும் பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். நயன்தாரா என்ன தான் அசைவ விரும்பி என்றாலும் இந்த பிரியாணி மேட்டர் மட்டும் சிம்புவிடம் இருந்து தான் தொற்றிருக்கும் என்றும் ரசிகர்கள் கருதுகிறார்கள். அப்போது பார்க்க கொஞ்சம் குண்டாக செழுமையான உடல் தோற்றத்துடன் வலம் வரக்காரணமும் அவருடைய உணவு வீக்னஸ் தான். அதன் பின்னர் தான் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்ததும் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு அழகான உடல்வாகிற்கு வந்துவிட்டார் என்பது கூடுதல் தகவல்.