பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டெண்ட் கொடுத்து விளையாடிய, சுரேஷ், சனம் ஷெட்டி ஆகிய பிரபலங்கள் சீக்கிரம் பிக்பாஸ் வீட்டிற்கு குட் பை சொன்ன நிலையில், 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கி வெற்றி மகுடத்தை சூடவில்லை என்றாலும், இறுதி சுற்று வரை சென்று வீடு திரும்பியுள்ளார் சோம் சேகர்.
தளபதின் பாட்டோடு ஆரத்தி சுற்றி... சோம் சேகரை வரவேற்ற குடும்பத்தினர்! வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டெண்ட் கொடுத்து விளையாடிய, சுரேஷ், சனம் ஷெட்டி ஆகிய பிரபலங்கள் சீக்கிரம் பிக்பாஸ் வீட்டிற்கு குட் பை சொன்ன நிலையில், 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கி வெற்றி மகுடத்தை சூடவில்லை என்றாலும், இறுதி சுற்று வரை சென்று வீடு திரும்பியுள்ளார் சோம் சேகர்.
இந்த நிகழ்ச்சியில், வெற்றி தோல்வியை தவிர்த்து பல பிரச்சனைகளையும், எந்த வித வெளியுலக தொடர்பும் இல்லாமல் 100 நாள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்து, தற்போது வெளியே வந்துள்ளதே பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 105 நாட்களாக விளையாடிய சோமசேகர் அன்பு குரூப்பில் ஐக்கியமானாலும், மற்றவர்கள் மீது பகைமை பாராட்டாமல் அனைவரிடமும் நட்பு பாராட்டிய இருந்தார் என்பது அவருடைய மிகப்பெரிய பிளஸ்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீட்டிற்கு சென்றதும், அவருக்கு கொடுக்கப்பட்ட அமோகமான வரவேற்பு குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அவருக்கு குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்லும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.
வீடியோவின் பின்னணியில் தளபதி விஜய்யின் ’மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் கூடுதல் சிறப்பு. மேலும் பல நாள் கழித்து சோம் சேகரை நேரில் பார்க்கும் அவர் வீட்டு குழந்தைகள், ஆசையோடு கட்டிப்பிடிப்பதும், அவர்களை சோம் சேகர் கொஞ்சுவது மற்றும் பெரியவர்கள் சோமை வரவேற்பது இந்த வீடியோவில் உள்ளது.
#som is back home! Nalla rest edu ma!
— SOMCharm (@SomCharm) January 18, 2021
Aww.. look he has taken #gaby and #zaara home too. #littlesisters https://t.co/65df33dqvu pic.twitter.com/oOthKh5ogl
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 20, 2021, 7:30 PM IST