நடிகர் பிரசன்னா மற்றும் புன்னைகை அரசியும் அவரது மனைவியுமான சிநேகா இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடி உள்ளனர்.

நடிகை சிநேகா மற்றும் பிரசன்னா இதுவரை ஒரு நடிகர்களாக மட்டும் வெளி உலகில் அறியப்பட்டனர். இந்நிலையில், இசைஞானி இளையராஜா இசையில், நடிகர் கமல் ஹாசன் மற்றும் நடிகை ரோஷினி இருவரும் இடம் பெற்ற பாடல், “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” என்ற பாடலை சிநேகா அவரது குரலில் பாடி உள்ளார்.

அதே போன்று, நடிகர் பிரசன்னாவும், கமல் பேசும் வசனங்கள் கூறும் போது, தொடர்ந்து சிநேகா பாட ஆரம்பிக்கிறார்.கணவன் மனைவியுமாக மிக அருமையாக இந்த பாடல் பாட அருகில் உள்ளவர்கள் அனைவரும் இவர்களை பாராட்டு மழையில் குளிக்க வைத்து விட்டனர்.

இதற்கு முன்னதாக  நடிகை சிநேகா தன்னுடைய உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக  ஜிம் செல்லும் போது, பிரசன்னாவும் உடன் இருந்து அவருக்கு வழி நடத்தும் ஒரு புகைப்படமும் ஏற்கனவே  வெளியாகி  இருந்தது என்பது குறிபிடத்தக்கது.