ஏ.ஆர்.ரகுமான் அந்த குழந்தை பாடிய பாடலை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் அனைத்து படங்கள் மற்றும் பாடல்களுக்கும் உலக அளவில் லட்ச கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இப்படிப்பட்ட இசை ஜாம்பவானையே சின்னசிறு குழந்தை வியக்க வைத்துள்ளது. அவரது திறமையை உலகறிய செய்யும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் அந்த குழந்தை பாடிய பாடலை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: கதவே வைக்குற அளவுக்கு டீப்நெக் ஜாக்கெட்! காட்டன் சேலையில் கும்முனு குண்டு மல்லி போல் போஸ் கொடுத்த ஷிவானி!
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். தன்னுடைய முதல் படத்திலேயே இவருடைய இசைக்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 'ரோஜா' படத்திற்காக தேசிய விருதையும் பெற்று முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார்.

மேலும் செய்திகள்: யாஷிகா கார் விபத்துக்கு இது தான் முக்கிய காரணம்..! ஆண் நண்பரின் பகீர் வாக்குமூலம்..!
மேலும் 'ஸ்லாம் டாக் மில்லியனர்' என்கிற படத்திற்காக, உலக புகழ் பெற்ற விருதாக கருதப்படும், 'ஆஸ்கர்' விருதையும் வென்றார். ஆஸ்கர் விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இவரையே வியக்க வைத்துள்ளார் ஒரு சின்னசிறு குழந்தை... மழலை குரல் மாறாமல், 'ரோஜா' படத்தில் இடம்பெற்ற, சின்ன சின்ன ஆசை பாடலை... ஹிந்தி மற்றும் தமிழில் பாடியுள்ளார். இவரது திறமையை சிறப்பிக்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் அந்த குழந்தையின் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் பலரும் பாராட்டி வருவதோடு இந்த வீடியோவுக்கு தங்களது லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: நழுவி விழும் மெல்லிய சேலையில்... கவர்ச்சி அதகளம் செய்த நிதி அகர்வால்..! பட் மேக்அப் தான் ரொம்ப ஓவர்..!
தற்போது 'பொன்னியின் செல்வன்', 'இரவின் நிழல்', 'நதியிலே நீராடும் சூரியன்', ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் திரைப்படம், மற்றும் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள 'அந்நியன்' ஆகிய படங்களுக்கு இசையமைக்க உள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இதோ...
