Asianet News TamilAsianet News Tamil

SK Next with Kamal : மாஸ் அப்டேட்.. கமலுடன் கூட்டணியமைத்த சிவகார்த்திகேயன்.. என்ன விஷயம் தெரியுமா?

SK Next with Kamal : கமலின் ராஜ்கமல் ப்ரொடக்ஷனில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இது குறித்து ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் கமல்,சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட மூவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து புதிய கூட்டணி குறித்த தகவலை பகிர்ந்துள்ளது.

SK Next with Kamal..
Author
Chennai, First Published Jan 15, 2022, 6:24 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன், கடந்த 2019-ம் ஆண்டு விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைத்தார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
 
சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தொடங்கி, பின்னர் தொகுப்பாளராக உயர்ந்து, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இவர் நடிப்பதோடு மட்டுமின்றி எஸ்.கே.புரடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். இதுதவிர பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். 

SK Next with Kamal..

தற்போது இவர் கைவசம் டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமாருடன் ஒரு படம், பிச்சைக்காரன் பட இயக்குனர் சசியுடன் ஒரு படம் என அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். மேலும் இந்த ஆண்டு டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார் சிவா.

இதில் டான் மற்றும் அயலான் படங்களின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டான் படம் வருகிற பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கமலின் ராஜ்கமல் ப்ரொடக்ஷனில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இது குறித்து ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் கமல்,சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட மூவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து புதிய கூட்டணி குறித்த தகவலை பகிர்ந்துள்ளது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios