sivakumar family anger for jothika
நடிகை ஜோதிகா திருமணத்திற்குப் பின் குடும்பத்திற்காக தன் நடிப்பிற்கு முழுக்கு போட்டார். பின் இவர் மஞ்சு வாரியர் நடித்து வெளிவந்த 'how old are you' படத்தில் நடிக்க மிகவும் விருப்பப்பட்டதால். சூர்யா இந்தப் படத்தை தமிழில் 36 வயதினிலே என்ற பெயரில் தானே தயாரித்தார் .
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நல்ல கதை அமைந்தால் குடும்பத்தினர் அனுமதியோடு நடிப்பேன் என்று கூறி இருந்த ஜோதிகா, பிரம்மா இயக்கத்தில் 'மகளிர் மட்டும்' படத்தில் நடித்து அந்தப் படமும் அவருக்கு வெற்றிப்படமாய் அமைந்தது.

இந்நிலையில் தற்போது முழு நேர நடிகையாக மாற முடிவு செய்துவிட்ட ஜோதிகா, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கத் துவங்கியுள்ளார். இதனால் ஏற்கெ னவே குடும்பத்தினர் கோபத்திற்கும் ஆளாகினார்.
அந்த வகையில் தற்போது பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் நாச்சியார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தில் 'ஜோதிகா' பேசிய ஒரு வார்த்தை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வார்த்தையை கண்டித்து ஏற்கனவே ஜோதிகா மற்றும் பாலா மீது மேட்டுப்பாளையம் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர்கள் இருவர் மீதும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் ஆபாசமாக பேசி நடித்துள்ள ஜோதிகா மீது , வழக்குப் பதிவு செய்யவேண்டும் என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஜோதிகாவின் மாமனாரிடம் இது குறித்து பலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனராம். இதன் காரணமாக மன உளைச்சலில் உள்ளாராம் சிவகுமார். திரும்பவும் ஜோதிகா படங்களில் நடித்து வருவதால் தற்போது மேலும் கடும் கோபத்தில் உள்ளனராம் சூர்யா குடும்பத்தினர்.
