பாலாவின் பிதாமகன் தான் எனக்கு மன வலிமையை கொடுத்தது – சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan said Pithamagan Movie is my Strength : தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்த பாலாவின் பிதாமகன் படம் தான் தனக்கு மன வலிமையை கொடுத்ததாக சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

Sivakarthikeyan said that Pithamagan Movie is my Strength on Vanangaan Audio Launch rsk

அமரன் படத்தின் மூலமாக மாஸ் ஹீரோக்களில் ஒருவராக அவதாரம் எடுத்துள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அடுத்த தளபதி என்று எல்லோரும் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே தளபதி விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்த நிலையில் அவரது இடம் காலியாக இருக்கும் நிலையில் அந்த இடத்தை சிவகார்த்திகேயன் நிரப்பி வருவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.

அதுமட்டுமின்றி விஜய் நடித்து வெளியான கோட் பட கிளைமேக்ஸில் விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததை வைத்து சிவகார்த்திகேயனுக்கு தான் விஜய்யோட இடம் என்று பரவலாக ஒரு பேச்சு அடிபட்டது. சிவகார்த்திகேயன் இதுவரையில் 20க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் எல்லாமே காமெடி கதையில் அவரை ஒரு காமெடி ஹீரோவாக காட்டியது. உதாரணத்திற்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், மனம் கொத்தி பறவை ஆகிய படங்களை சொல்லலாம்.

Sivakarthikeyan said that Pithamagan Movie is my Strength on Vanangaan Audio Launch rsk

அதோடு இதுவரையில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான எந்தப் படமும் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் குவிக்கவில்லை. இந்த சூழலில் தான் மறைந்த தமிழக வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமான அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருந்தார். இந்தப் படம் எதிர்மறை விமர்சனத்தை பெறவே இல்லை என்றாலும் கூட நெகட்டிவ் எண்டிங்கிறு எப்படி வரவேற்பு கிடைக்கும் என்ற ஒரு பயம் இருந்துள்ளது.

அப்பாவுடன் சேர்ந்து பாலாவுக்கு தங்க சங்கிலியை பரிசளித்த சூர்யா!

இது குறித்து சென்னையில் நடைபெற்ற வணங்கான் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனே கூறியிருக்கிறார். அதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் படங்களில் நெகட்டிவ் எண்டிங்கோடு முடியும் படங்கள் பெரிதாக ஓடாது என்று சொன்னார்கள். ஆனால், பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த பிதாமகன் படம் நெகட்டிவ் எண்டிங்கோடு தான் முடிந்தது. இந்தப் படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

Sivakarthikeyan said that Pithamagan Movie is my Strength on Vanangaan Audio Launch rsk

அந்தப் படம் தான் எனக்கு அமரன் ரிலீசாகும் போது மன வலிமையை கொடுத்தது. அப்படி ஒருவரை இந்த தருணத்தில் கொண்டாடுகிற பாக்கியத்தை எனக்கு கொடுத்தது பெருமையாக இருக்கிறது என்றார். மேலும், அருண் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் வணங்கான் மைல் கல்லாக இருக்கும் என்று அவர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan said Pithamagan Movie is my Strength : சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த அமரன் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.320 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் சிறந்த படமாக முத்திரை குத்தியுள்ளது. தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், சுதா கொங்கரா படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஹிட்டுக்காக போராடி வந்த சிவகார்த்திகேயனுக்கு அமரன் டர்னிங் பாய்ண்டாக அமைந்துவிட்டது. ஒரே படத்தால் ஒட்டு மொத்த ரசிகர்களும் கொண்டாடும் ஒரு ஹீரோவாக உச்சம் தொட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா முன்னாடி நான் சிகரெட் பிடிக்கவே மாட்டேன் – இயக்குநர் பாலா!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios