சூர்யா முன்னாடி நான் சிகரெட் பிடிக்கவே மாட்டேன் – இயக்குநர் பாலா!
Director Bala never smoke a cigarette in front of Surya: நான் சூர்யா முன்னாடி என்னைக்குமே சிகரெட் பிடிக்கவே மாட்டேன் என்று இயக்குநர் பாலா கூறியிருக்கிறார்.
வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் பாலா இயக்கிய இந்தப் படத்தில் அருண் விஜய், ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரக்கனி, ஜான் விஜய், மிஷ்கின், ராதா ரவி, சிங்கம் புலி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் மற்றும் சாம் சிஎஸ் இருவரும் இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கின்றனர். வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வணங்கான் திரைக்கு வர இருக்கிறது. அன்று தான் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லீ படமும் திரைக்கு வர இருக்கிறது.
வணங்கான் கதையில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தார். அதோடு, அந்தப் படத்தையும் அவர் தான் தயாரிக்க இருந்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருந்தார். ஆனால், ஸ்டோரி லைன் மாற்றம் தொடர்பாக சூர்யா மற்றும் பாலாவிற்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இந்த படத்திலிருந்து சூர்யா விலகினார். இதைத் தொடர்ந்து அருண் விஜய் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ஜோடியாக ரோஷ்னி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதையடுத்து இந்த படம் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டு இப்போது வெளியீட்டிற்கும் தயாராகிவிட்டது. இந்த நிலையில் தான் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், படக்குழுவினர்களுடன் நடிகர் சூர்யா, சிவக்குமார், சிவகார்த்திகேயன் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
கூரன் படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும்: மேனகா காந்தி வேண்டுகோள்!
வணங்கான் இசை வெளியீட்டு விழா உடன் இணைந்து இயக்குநர் பாலாவின் 25 ஆண்டுகால சினிமா பயணத்திற்கான பாராட்டு விழாவும் இன்று நடைபெற்றது. இதில், சூர்யா மற்றும் சிவக்குமார் இணைந்து பாலாவின் 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை பாராட்டும் வகையில் தங்க சங்கிலியை பரிசாக அணிவித்தனர். சிவகார்த்திகேயன் பேசும் போது அருண் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் வணங்கான் மைல் கல்லாக இருக்கும் என்று பேசினார்.
நடிகர் சூர்யா பேசும் போது, என்னுடைய வாழ்க்கையில் நான் சிகரெட் பிடிச்சதே இல்லை. ஆனால், பாலாவிற்காக நந்தா படத்தின் ஷுட்டிங்கின் போது 300 முறை சிகரெட் பிடிச்சு பழகினேன். முதல் முறையாக பாலாவிற்காக தான் சிகரெட் பிடித்தேன். நந்தா படம் இல்லையென்றால் காக்க காக்கா படம் வந்திருக்காது. காக்க காக்க படம் இல்லையென்றால் வாரணம் ஆயிரம் படம் வந்திருக்காது. எனக்கு வாய்ப்பு கொடுத்ததே பாலா தான். அவரை சார் என்று கூப்பிட்டால் அவருக்கு பிடிக்காது. அண்ணன் என்று அழைத்தால் தான் பிடிக்கும்.
நான் சிகரெட் பிடிச்சதே இல்ல; பாலாவுக்காக முதல் முறையாக சிகரேட் பிடிச்சேன்: வணங்கானில் சூர்யா!
இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாவிட்டாலும் அன்பு குறையவே குறையாது. நான் என்ன நினைக்கிறேன் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அந்தளவிற்கு எங்களுக்கு இடையில் நல்ல உறவு இருக்கிறது என்று பேசியுள்ளார். சூர்யாவைத் தொடர்ந்து பாலா கூறியிருப்பதாவது: சூர்யா முன்பு சிகரெட் பிடிக்க மாட்டேன். நான் சிகரெட் பிடிக்கும் போது எல்லோருமே எனக்கு அட்வைஸ் செய்வார்கள். ஆனால், சூர்யா மட்டும் தான் வருத்தப்படுவார். ஒரு நடிகராக வருத்தப்பட முடியாது. உண்மையான அன்பு, தம்பி என்ற உறவு இருந்தால் மட்டுமே வருத்தப்பட முடியும். என்னை விட என் மீது அதிக அன்பு கொண்டவர் சூர்யா என்று பேசியுள்ளார்.
அப்பாவுடன் சேர்ந்து பாலாவுக்கு தங்க சங்கிலியை பரிசளித்த சூர்யா!