நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீர்த்தபதி உடல் நலகுறைவால் காலமானார். ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான். தமிழ்நாட்டின் கடைசி ராஜா சிங்கப்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி. தென் இந்தியாவில் எஞ்சியிருக்கும் பட்டம் கட்டிய ஒரே ராஜாவாக கருதப்படுபவர் தான் சிங்கப்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி. இவரது முழுப்பெயர் தென்னாட்டு புலி நல்லகுட்டி. சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெய தியாக முத்து சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி. சுருக்கமாக டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. 

இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?

1936ம் ஆண்டு தந்தை சங்கர தீர்த்தபதி மறைவிற்கு பிறகு 6 வயதில் முருகதாஸ் தீர்த்தபதிக்கு முடிசூட்டப்பட்டது. தமிழகத்தின் கடைசி ராகாவான இவர் தனது 89வது வயதில் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். சிங்கம்பட்டி ராஜாவின் வாழ்க்கையை வைத்தே சீமராஜா திரைப்படம் வெளியானது. பொன்ராம் இயக்கிய அந்த படத்தில் சீமராஜாவாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த படத்தில் நெப்போலியன், சூரி, சமந்தா, சிம்ரன், லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனுக்காக ரசிகர்களை மிரள வைக்க போகும் நயன்தாரா...!

இதனிடையே சிங்கம்பட்டி ராஜாவின் மறைவைக் கேள்விப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், “சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா🙏 அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் #RIPsingampattiRaja” என்று பதிவிட்டுள்ளார். சிங்கம்பட்டி ராஜாவின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.