மாவீரன் செட்டில் அதிதியுடன் பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்! வைரலாகும் வீடியோ..!

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தன்னுடைய 38-வது பிறந்த நாளை, வெகு விமர்சியாக கொண்டாடி வரும் நிலையில், 'மாவீரன்' ஷூட்டிங் ஸ்பாட்டில், நடிகை அதிதி ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வெளியாகி, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

sivakarthikeyan birthday celebration for maveeran shooting spot video

சின்னத்திரையில் பிரபலமானவர்கள் திரைப்படங்களில் ஜொலிக்க முடியுமா? என்கிற கேள்வி பல வருடங்களாகவே இருந்து கொண்டிருந்த நிலையில், அதிரடியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குள் நுழைந்து ஹீரோவாக வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'மெரினா' படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றதோடு, சிவகார்த்திகேயனுக்கு அறிமுகப்படமாகவும் அமைந்தது.

sivakarthikeyan birthday celebration for maveeran shooting spot video

பின்னர் தனுஷுடன், 3 படத்தில் காமெடி வேடத்தில் நடித்த சிவகார்த்திகேயன்... சற்றே சுதாரித்து கொண்டு காமெடி ட்ராக்கில் இருந்து மாறி, தொடர்ந்து ஹீரோ சப்ஜெக்ட் கதைகளையே தேர்வு செய்து நடித்தார்.  எதார்த்தமான காமெடி கதைக்களத்துடன், சிவகார்த்திகேயன் தேர்வு செய்து நடித்த 'மான் கராத்தே', 'ரஜினி முருகன்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்',  'ரெமோ' போன்ற படங்கள் இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள அஜித், விஜய், விக்ரம், தனுஷ் அளவிற்கு உயர செய்தது.

பிரபாஸின் விருந்தோம்பல் ஆச்சர்யப்பட வைக்கும்! பிரமித்து கூறிய நடிகை தமன்னா!

குறிப்பாக சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்', 'டான்' , போன்ற படங்கள் 100 கோடி கிளப்பிலும் இணைத்தது. தொடர்ந்து விதித்தியாசமான கதைகளையே அதிகம் தேர்வு செய்து நடித்து வரும், சிவகார்த்திகேயன், 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஆதீன ஷங்கர் நடிக்கிறார்.

sivakarthikeyan birthday celebration for maveeran shooting spot video

விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் பிறந்தநாளை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் நெத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிங்க் நிற கவுனில்... பிரக்னன்சி போட்டோ ஷூட் நடத்திய நடிகை பூர்ணா! வைரலாகும் கியூட் போட்டோஸ்!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios