Director Ravikumar : "இன்று நேற்று நாளை" என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு சுமார் 9 ஆண்டுகள் கழித்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அயலான்.

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு உருவாக்க தொடங்கிய திரைப்படம் தான் "அயலான்". இந்த திரைப்படம் சிவகார்த்திகேயன் அவர்களுடைய 14வது திரைப்படமாக உருவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த திரைப்படம் மெல்ல மெல்ல உருவாகி வந்தது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் ஆக கடந்த ஜனவரி 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகிய மக்கள் மத்தியில், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அயலான். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தை ரவிக்குமார் அவர்கள் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

அச்சு அசல் அப்படியே இருக்கே! அயோத்தி பால ராமர் கண்களோடு.. கேப்டன் கண்களை ஒப்பிட்டு வைரலாக்கும் ரசிகர்கள்!

மேலும் சுமார் 50 கோடி ரூபாயை VFX பணிகளுக்காக மட்டுமே செலவிட உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தெலுங்கில் அந்த திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் அதற்கான முன்னோட்டமாக பல இடங்களில் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள சிவகார்த்திகேயன் மற்றும் ரவிக்குமார் தற்பொழுது கொடுத்துள்ள தகவலின் படி அய்லான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவது உறுதி.

Scroll to load tweet…

ஆனால் அதற்கு முன்னதாக ரவிக்குமார் வேறு ஒரு நடிகருடன் ஒரு படத்தில் இணை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரவிக்குமார் தான் நடிகர் சூர்யாவிற்கு ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை கூறியுள்ளதாக சில தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அயலான் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கு முன்பாக சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் ரவிக்குமார் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

ஹாட்ரிக் ஹிட் அடிக்குமா விஷால் - ஹரி கூட்டணி? சம்மர் ஸ்பெஷலாக திரைக்கு வருகிறது ரத்னம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு