பாடிக்கொண்டிருக்கும் போது பென்னி தயாள் தலையின் மீது ட்ரோன் கேமரா மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலமான பாடகர்களில் ஒருவராக இருப்பவர் பென்னி தயாள். அஜித், தளபதி விஜய், சிவகார்த்திகேயன், சிம்பு என்று மாஸ் ஹீரோக்களின் படங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி, குஜராத்தி என்று பல மொழிகளில் 3000க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்.

'எதிர்நீச்சல்' சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணமா? காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், சென்னையிலுள்ள விஐடி கல்லூரியில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பென்னி தயாள் கலந்து கொண்டு ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி என்ற பாடல் பாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பறந்து கொண்டிருந்த ட்ரோன் கேமரான திடீரென்று அவரது மொட்டை தலையின் பின்புறத்தில் தாக்கியுள்ளது.

ஹாட் ஸ்டார் ஓடிடியில் பட்டையை கிளப்பும் 'தி லெஜெண்ட்'! வேற லெவல் வீடியோவுடன் சரவணன் அருள் போட்ட பதிவு.!

இதனால், காயமடைந்த அவர் உடனடியாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதோடு இசை நிகழ்ச்சியும் அதோடு நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பென்னி தயாள் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: கல்லூரியில் நடந்த சம்பவம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. ட்ரோனின் இறக்கையானது தனது தலையின் பின்பக்கம் தாக்கியது. அதனை தடுக்க முயற்சித்த போது, எதிர்பாராத விதமாக எனது இரு கைகளில் காயம் ஏற்பட்டது. கையில் கட்டும் போடப்பட்டுள்ளது. ஆனால், அது தற்போது பரவாயில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

என் தாய் சேயாகிறாள்.. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட தாய்! கண்ணீருடன் பிரபல தமிழ் நடிகர் போட்ட பதிவு!

அதோடு, நிகழ்ச்சி குறித்து பாதிப்பை உணர்ந்து கொண்ட தயாள் கலைஞர்கள் இது போன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ட்ரோன் உங்கள் அருகில் நெருங்க முடியாததை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். கலைஞர்கள் அனைவரும் மேடையில் பாடுகிறார்கள். சான்றிதழ் பெற்ற தொழில்நுட்ப ட்ரோன் இயக்குனர்களை கொண்டுதான் இயக்க வேண்டும். விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். வழக்கமான ஏற்பாடுகளை மட்டும் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

View post on Instagram