ஹாட் ஸ்டார் ஓடிடியில் பட்டையை கிளப்பும் 'தி லெஜெண்ட்'! வேற லெவல் வீடியோவுடன் சரவணன் அருள் போட்ட பதிவு.!
பிரபல தொழிலதிபர் சரவணன் அருள் நடிப்பில் வெளியான 'தி லெஜெண்ட்' திரைப்படம் மார்ச் 3-ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது தி லெஜெண்ட் சரவணன் மிகவும் பூரிப்புடன், வீடியோவுடன் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
'உல்லாசம்' படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில், ஜூலை 28ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் 'தி லெஜெண்ட்' மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், தற்போதைய மக்களுக்கு தேவையான சிறந்த கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது.
விஞ்ஞானியாக சரவணன் அருள் நடித்திருந்தார். சற்று ஓவர் பர்ஃபாமென்ஸ் மற்றும் இப்ப படத்தின் கதைக்களம் வீக்காக இருப்பது தான் இப்படத்தில் தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் தெரிவித்தனர். எனினும் இப்படம் போட்ட முதலை பெற்று விட்டதாக இப்படத்தில் கதாநாயகனும், தயாரிப்பாளருமான சரவணன் அருள் தெரிவித்திருந்தார்.
லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக கீர்த்திகா திவாரி நடித்திருந்த இப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுதலே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் லதா, விஜயகுமார், பிரபு, தம்பி ராமையா, தீபா ஷங்கர், ரோபோ சங்கர், தேவதர்ஷினி, சச்சு, விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
அரசியல்வாதியின் மகளை இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகர் மஞ்சு மனோஜ்!
பொதுவாக திரையரங்கில் வெளியாகும் படங்கள் ஒரு மாதம் கழித்து ஓடிடி-யில் வெளியாகும் நிலையில், தி லெஜெண்ட் திரைப்படம், திரையரங்கில் வெளியாகி ஆறு மாதங்களுக்கு மேலாகியும் ஓ டி டி தளத்தில் வராதது இப்படத்தை ஓடிடி-யில் காண வேண்டும் என நினைத்த பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. எனினும் தொடர்ந்து இப்படம் ஓ டி டி தளத்தில் வெளியாக வேண்டும் என நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதை அடுத்து ஒரு வழியாக மார்ச் மூன்றாம் தேதி இப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
வெளியான இரண்டே நாட்களில், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, ஹாட் ஸ்டார் தளத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. இந்த சந்தோஷத்தை லெஜெண்ட் சரவணன் தன்னுடைய ட்விட்டரில் வெளிப்படுத்தும் விதமாக ஆடியோ லாஞ்சின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.