39 வயதில் மாரடைப்பு... பிரபல பாடகர் திடீர் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

தெலுங்கானா மாநில கிடங்கு கழக தலைவரும், நாட்டுப்புற பாடகருமான சாய் சந்த் மாரடைப்பால் மரணமடைந்தது அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

singer and Telangana activist Saichand passed away

நாட்டுப்புற பாடகரும், தெலுங்கானா மாநில கிடங்கு கழக தலைவருமான சாய் சந்த் மாரடைப்பால் மரணமடைந்தார். சாய் சந்த் தனது குடும்பத்தினருடன் கர்னூல் மாவட்டம் கருகொண்டாவில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு புதன்கிழமை மாலை குடும்பத்தினருடன் சென்றார். நள்ளிரவில், உடல்நிலை சரியில்லாமல் போனதால், உடனடியாக கர்னூலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், குடும்பத்தினர் அவரை கச்சிபௌலியில் உள்ள கேர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் , அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 39. மறைந்த பாடகர் சாய் சந்துக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... Ethirneechal Serial: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.! ஏன்? வெளியான அதிர்ச்சி காரணம்.!

singer and Telangana activist Saichand passed away

சாய் சந்தின் மறைவுக்கு பிஆர்எஸ் தலைவரும், தெலுங்கானா மாநில முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ள அவர், சாய்சந்த் இவ்வளவு இளம் வயதில் மரணமடைந்தது தன்னை மிகவும் பாதித்ததாக கூறியுள்ளார். தெலுங்கானா மாநில போராட்டத்தின் ஒரு பகுதியாக கலாச்சார இயக்கத்தில் சாய்சந்தின் பங்கு விலைமதிப்பற்றது எனவும் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

சாய் சந்தின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். துந்தம் நிகழ்ச்சி மூலம் பாடல்கள் பாடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார் சாய் சந்த். அவரின் இந்த திடீர் மறைவு அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்...  சூர்யாவை தொடர்ந்து ஆஸ்கர் குழுவில்.. இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 4 பிரபலங்கள்! ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios