தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் நடிகை அதிதி ராவ், நடிப்பை தொடர்ந்து தற்போது பாடகியாகவும் மாறியுள்ளார்.

2007 ஆம் ஆண்டு 'ஸ்ரீநகரம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவருக்கு, பின் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், தமிழ் திரையுலகிற்கு குட் பை சொல்லி விட்டு... ஹிந்தி மற்றும் மராத்திய மொழி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். 

10 வருடம் கடந்த ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்க வில்லை என்றாலும், இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இவர் பாடிய பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்தார். தற்போது சைக்கோ படத்தில் நடித்து வருகிறார்.

 

மேலும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து, நடித்துள்ள ஜெயில் படத்தில், காத்தோடு என்று தொடங்கும் ஒரு டூயட் பாடலை ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து பாடி பாடகியாகவும் மாறியுள்ளார். இதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜிவி பிரகாஷ், இந்த பாடல் பாடியது நல்லதொரு அனுபவமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.