Singapennae Serial Episode Issues : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சிங்கப்பெண்ணே என்ற சீரியலில் இங்க பாதி காட்சி, அங்க பாதி காட்சி என்று ஒளிபரப்பு செய்யப்படுவதால் மக்கள் வெறுப்பு அடைந்துள்ளனர்.
Singapennae Serial Episode Issues : நாள்தோறும் காலை முதல் இரவு வரையில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மக்களை அதிகளவில் கவர்வதே சீரியல்கள் தான். சன் டிவியில் மட்டும் கிட்டத்தட்ட 15க்கும் அதிகமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. காலை 11 மணிக்கு செவ்வந்தி சீரியல் முதல் இரவு 11.30க்கு ஒளிபரப்பு செய்யப்படும் புது வசந்தம் சீரியல் வரையில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில், இரவு 6.30 மணிக்கு ராமாயணம் சீரியல் தொடங்கி அன்னம், கயல், மருமகள், மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல் தொடர்கிறது, ரஞ்ஜினி, மல்லி, மலர், புது வசந்தம் என்று இரவில் மட்டும் 11 சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
TRPயில் சன் டிவி சீரியலை தட்டிதூக்கிய கார்த்திகை தீபம்; இந்த வார டாப் 10 சீரியலில் அதிரடி மாற்றம்
இப்படி பல சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில் மக்கள் சீரியல்களில் மூழ்கியிருக்கின்றனர். அப்படி சீரியல்களில் மூழ்கியிருக்கும் மக்களை சிங்கப் பெண்ணே என்ற சீரியல் வெறுப்படையச் செய்துள்ளது. ஏனென்றால், இந்த சீரியலில் இந்த சீனில் பாதி காட்சி, அடுத்த சீனில் பாதி காட்சி என்று பாதி பாதி காட்சியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நேற்றைய எபிசோடில் 6 மாதத்திற்கு பிறகு சம்பள உயர்வு கொடுக்கப்பட வேண்டும். ஏன் கொடுக்கப்படவில்லை என்பதை முதலாளியிடம் கேட்க வரும் தொழிலாளிகள், அவருக்கு உண்மையை புரிய வைக்கிறார்கள்.

மற்றொரு காட்சியில் தனக்கு சம்பள உயர்வு கொடுக்கப்படவில்லை என்பதை தனது அண்ணனிடம் பேசி கொண்டிருக்கிறார் ஹீரோயின். இந்த 2 காட்சிகளையும் பாதி பாதி சீனாக காட்டி வெறுப்படையச் செய்துள்ளனர். இது எடிட்டிங் தவறா அல்லது அப்படிதான் வைக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை. இதன் காரணமாக மக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஆனால், மக்களுக்கு பிடித்த தொலைக்காட்சி தொடர்களில் இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது.
விஜய்யின் ஜனநாயகன் படத்தில் அட்லீ, நெல்சன், லோகேஷுக்கு இப்படி ஒரு ரோலா?
மக்களுக்கு பிடித்த பேவரைட் சீரியலில் சிங்கப் பெண்ணே, கயல், மருமகள், மூன்று முடிச்சு ஆகிய சீரியல்கள் இடம் பெற்றுள்ளன. சிங்கப் பெண்ணே சீரியலில் மணீஷா மகேஷ், தர்ஷக் கௌடா, அமல்ஜித ஆகியோர் லீடு ரோலில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஏராளமான துணை நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். தனது கார்மெண்ட்ஸில் வேலை பார்க்கும் பெண்ணை காதலிக்கும் முதலாளிக்கும், அதே கார்மெண்ட்ஸில் வேலை பார்க்கும் சக ஊழியர்களுக்கு இடையில் நடக்கும் சம்பங்கள் தான் இந்த சீரியல்.
சுத்தமா தமிழ் தெரியாத ‘இந்த’ பாடகி தமிழில் பாடிய எல்லா பாடல்களும் ஹிட்! யார் இவர்?
அதாவது நிதி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் (ஆனந்தி) தனது வீட்டை விட்டு வெளியேறி சென்று ஒரு இடத்தில் வேலைக்கு செல்கிறார். ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு வேலை பார்க்கும் அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் இந்த சீரியல்.
