MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • TRPயில் சன் டிவி சீரியலை தட்டிதூக்கிய கார்த்திகை தீபம்; இந்த வார டாப் 10 சீரியலில் அதிரடி மாற்றம்

TRPயில் சன் டிவி சீரியலை தட்டிதூக்கிய கார்த்திகை தீபம்; இந்த வார டாப் 10 சீரியலில் அதிரடி மாற்றம்

சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களே டாப் 10 டிஆர்பி பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் ரேஸில் குதித்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 06 2025, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Top 10 Tamil Serial TRP Rating : வார வாரம் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடம்பிடித்த தமிழ் சீரியல்களின் பட்டியலில் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் தான் இருக்கும் ஆனால் இந்த வாரம் ஜீ தமிழ் தொடரும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

2025-ம் ஆண்டின் 8வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் கடந்த 9வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 10வது இடத்தை பிடித்திருக்கிறது. அந்த சீரியலுக்கு 6.05 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த சன் டிவியின் இராமாயணம் சீரியல் இந்த வாரம் டிஆர்பியில் பலத்த அடி வாங்கி 13வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
karthigai Deepam

karthigai Deepam

டாப் 10 சீரியல்களின் பட்டியலில் இந்த வாரம் புது வரவாக ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் வந்துள்ளது. இந்த சீரியல் டிஆர்பி மளமளவென முன்னேறி 6.07 புள்ளிகளை பெற்று 9வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரம் 8வது இடத்தில் இருந்த விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரமும் 6.30 புள்ளிகளுடன் அதே இடத்தை தக்கவைத்துள்ளது. அடுத்ததாக 7வது இடத்தை சன் டிவியின் அன்னம் சீரியல் பிடித்துள்ளது. கடந்த வாரம் 6-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல் ஒரு இடம் பின் தங்கி உள்ளது. இந்த சீரியலுக்கு 6.98 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்தி - மேடையில் ஷாக் கொடுத்த சாமுண்டீஸ்வரி; 'கார்த்திகை தீபம்' அப்டேட்!

34
Serial TRP

Serial TRP

கடந்த வாரம் 7ம் இடத்தில் இருந்த எதிர்நீச்சல் 2 சீரியல் இந்த வாரம் டிஆர்பியில் முன்னேற்றம் கண்டு 6ம் இடத்துக்கு தாவி உள்ளது. அந்த சீரியலுக்கு 7.35 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. அதேபோல் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலும் இந்த வாரம் சரிவை சந்தித்து உள்ளது. கடந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டு 7.78 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருக்கிறது.

44
Top 10 Tamil Serial

Top 10 Tamil Serial

முதல் நான்கு இடங்களையும் சன் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அதன்படி கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 8.48 புள்ளிகளுடன் 4ம் இடத்தை பிடித்துள்ளது. சைத்ரா ரெட்டி நடித்த கயல் தொடர் 8.80 டிஆர்பி உடன் 3ம் இடத்திலும் ஸ்வாதி கொண்டே நடித்த மூன்று முடிச்சு சீரியல் 9.05 புள்ளிகளுடன் 2ம் இடத்தையும் பிடித்திருக்கிறது. வழக்கம் போல் 9.30 டிஆர்பி உடன் சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்தில் நீடிக்கிறது.

இதையும் படியுங்கள்... குமரனுடன் ஜோடியாக சென்று சிக்கிய அரசி; சுகன்யாவிடம் அசிங்கப்பட்ட பழனி! 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அப்டேட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
சன் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved