சுத்தமா தமிழ் தெரியாத ‘இந்த’ பாடகி தமிழில் பாடிய எல்லா பாடல்களும் ஹிட்! யார் இவர்?
தமிழ் தெரியாமல் கோலிவுட்டில் ஜொலித்த ஹீரோயின்கள் நிறைய பேரை பார்த்திருக்கிறோம்; ஆனால் தமிழே தெரியாமல் பல ஹிட் பாடல்களை கொடுத்த பாடகி ஒருவர் இருக்கிறார். அவரைப் பற்றி பார்க்கலாம்.

Singer Shreya Ghoshal Hit Songs in Tamil : திறமைக்கு மொழி ஒரு தடையில்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பாடகி ஷ்ரேயா கோஷல் தான். இவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது ஆனால் கோலிவுட்டில் 22 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி பாடகியாக கோலோச்சி வருகிறார். இவரது குரலுக்கு மயங்காத ஆளே இருக்க முடியாது. இவர் பாடி தமிழில் சூப்பர் ஹிட்டான பாடல்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Shreya Ghoshal
பாடகி ஷ்ரேயா கோஷலை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது இசைஞானி இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா தான். இவர் இசையமைத்த ஆல்பம் என்கிற படத்திற்காக ‘செல்லமே செல்லம்’ என்கிற பாடலை பாடி இருந்தார் ஷ்ரேயா கோஷல். இந்த படம் அட்டர் பிளாப் ஆனாலும் அப்பாடல் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. அதில், ‘அம்முக்குட்டி... பூஜ்ஜிக்குட்டி’ என கொஞ்சி கொஞ்சி பாடி இருப்பார் ஷ்ரேயா கோஷல்.
Shreya Ghoshal Hit Songs
முதல் பாடலிலேயே சிக்சர் அடித்த ஷ்ரேயா கோஷலுக்கு தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஷ் ஜெயராஜ் ஆகியோர் இசையில் பாட வாய்ப்புகள் குவிந்தது. குறிப்பாக இளையராஜா இசையில் பிதாமகன் படத்தில் வரும் இளங்காத்து வீசுதே பாடல், விருமாண்டி படத்தில் வரும் சண்டியரே மற்றும் உன்னவிட ஆகிய கிளாசிக் ஹிட் பாடல்கள் எல்லாம் ஷ்ரேயா கோஷல் பாடியது தான்.
இதையும் படியுங்கள்... ஒரு பாட்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம்! இந்தியாவின் டாப் பாடகி! இவங்க கணவரும் வெயிட்டு பார்ட்டி தான்!
Shreya Ghoshal Tamil Hit Songs
அதேபோல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில், எனக்கு 20 உனக்கு 18 படத்தில் இடம்பெறும் ‘அழகின்னா அழகி அஸ்காவா’ பாடல், சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற ‘முன்பே வா’ என்கிற பாடலும் ஷ்ரேயாவின் குரலில் வந்த பாடல்கள் தான். இதுதவிர குரு படத்திற்காக நன்னாரே பாடல், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் மன்னிப்பாயா, ராவணன் படத்திற்காக கள்வரே பாடல், எந்திரன் படத்தில் இடம்பெற்ற காதல் அணுக்கள் பாடல் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.
Singer Shreya Ghoshal
அடுத்ததாக யுவன் சங்கர் ராஜா இசையில் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் வரும் நினைத்து நினைத்து பார்த்தேன் பாடல், சண்டக்கோழி படத்தில் இடம்பெற்ற தாவணி போட்ட தீபாவளி பாடல், தாஸ் படத்தில் வரும் சாமிக்கிட்ட சொல்லிப்புட்ட பாடல், பருத்திவீரன் படத்திற்காக ஐய்யய்யோ பாடல், அனிருத் இசையில் எதிர்நீச்சல் படத்தில் வரும் வெளிச்சப்பூவே பாடல், டி இமான் இசையில் தேசிங் ராஜா படத்தில் வரும் அம்மாடி அம்மாடி பாடல், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அந்நியன் படத்திற்காக அண்டங்காக்கா கொண்டக்காரி பாடல், மாற்றான் படத்தில் வரும் நானி கோனி பாடல் என தமிழில் இவர் பாடிய 200க்கும் மேற்பட்ட பாடல்களில் பெரும்பாலானை ஹிட் பாடல்கள் தான். தமிழே தெரியாமல் இவ்வளவு அழகாக தமிழ் பாடல்களை ஷ்ரேயா கோஷல் பாடி உள்ளது வியத்தகு விஷயம் தான்.
இதையும் படியுங்கள்... ஏ.ஆர்.ரகுமான் முதல் ஸ்ரேயா கோஷல் வரை; 8 பணக்கார பாடகர்கள்!