விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’படம் பல தொந்தரவுகளைக் கடந்து ஒரு வழியாக தியேட்டர்களுக்கு சென்று சேர்ந்திருக்கும் நிலையில், ‘இப்பட ரிலீஸை ஒட்டி பல இன்னல்களையும் மன உளைச்சல்களையும் சந்தித்தேன்’என இப்பட தயாரிப்பாளர் எஸ்.என்.ராஜராஜன் தெரிவித்துள்ளார். 


விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’படம் பல தொந்தரவுகளைக் கடந்து ஒரு வழியாக தியேட்டர்களுக்கு சென்று சேர்ந்திருக்கும் நிலையில், ‘இப்பட ரிலீஸை ஒட்டி பல இன்னல்களையும் மன உளைச்சல்களையும் சந்தித்தேன்’என இப்பட தயாரிப்பாளர் எஸ்.என்.ராஜராஜன் தெரிவித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில்,...பேரன்புடையீர்,
‘சிந்துபாத்’ திரைப்படம் ஜூன் 27 முதல் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இப்படத்தை வெளியிடுவதற்கு தடையாக பல நியாயமற்ற கோரிக்கைகளையும் பல முறைகேடான வழிகளில் பிரச்சனைகளையும் நான் சந்திக்க நேர்ந்தது அனைவரும் அறிந்ததே.

ஆர்க்கா மீடியாவின் பணம் பரிக்கும் சூழ்ச்சிகளிலும் க்யூப் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களுக்கு எதிரான ஒருதலைபட்ச செயல்பாடுகளிலும் பல கயவர்களின் மறைமுக எதிர்ப்புகளிலும் சிக்கி செய்வதறியாது முன்பு அறிவித்த தேதியில் படத்தையும் வெளியிட முடியாமல் பல இன்னல்களுக்கும் மன உலைச்சல்களுக்கும் தள்ளப்பட்டேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இவ்வனைத்து விஷயங்களையும் அறிந்து உடனடியாக எந்த ஒரு தனிப்பட்ட சுயநலமும் லாபமும் இல்லாமல் எனக்காகவும் நியாயத்திற்காகவும் துணைநின்று இறுதிவரை போராடி அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து படத்தை வெளியிட பக்கபலமாக இருந்த மதிப்பிற்குரிய JSK films சதீஷ்குமார் அவர்களுக்கும் Amma creations T.சிவா அவர்களுக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். 

இரவு பகல் பாராமல் உடனிருந்து போராடிய அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.உங்களின் முழு ஒத்துழைப்பும் ஒத்துமையாலும்தான் இன்று ‘சிந்துபாத்’ சாத்தியமாகி இருக்கிறது. இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கென்று ஒரு பிரச்சனை என்றால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உறுதியாகவும் பக்கபலமாகவும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கிய JSK films சதீஷ்குமார் அவர்களுக்கும் Amma creations T.சிவா அவர்களுக்கும் துணைநின்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ராஜராஜன்.

இப்பட ரிலீஸுக்கு விஜய் சேதுபதி இரண்டு கோடிகள் கொடுத்து உதவினார் என்று செய்திகள் வந்த நிலையில் ராஜராஜனின் நன்றிப் பட்டியலில் விஜய் சேதுபதியின் பெயர் ஏன் இடம்பெறவில்லை என்பது விளங்கவில்லை.