MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vishwanath And Sons Day 1 Box Office : முதல் நாளே கருப்பு பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ்..!

Vishwanath And Sons Day 1 Box Office : முதல் நாளே கருப்பு பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ்..!

Vishwanath And Sons Movie Box Office Collection Day 1 : வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 15 2026, 07:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vishwanath And Sons Day 1 Box Office
Image Credit : X

Vishwanath And Sons Day 1 Box Office

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். சித்தாரா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். குடும்ப உறவுகள், குழந்தை மீதான பாசம் மற்றும் கணவன்-மனைவி உறவில் ஏற்படும் மாற்றங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை நகர்கிறது. திருமண வாழ்க்கையில் பெரிய ஆர்வம் இல்லாதவராக இருக்கிறார் சூர்யா. ஆனால், தனது குடும்பத்தின் வாரிசு தொடர வேண்டும் என்ற ஆசை அவரது தாய் ராதிகாவுக்கு இருக்கிறது.

Vishwanath and Sons Review : சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கதை என்ன?
Image Credit : others

கதை என்ன?

இதற்காக ஒரு வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுக்கொண்டு குடும்பத்திற்குள் அழைத்து வருகிறார் சூர்யா. சில காலத்திற்குப் பிறகு அந்தக் குழந்தைக்கு உடல்நலப் பிரச்சனை ஏற்படுகிறது. குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அதன் உயிரியல் தாய் நேரில் வர வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அப்போது மமிதா பைஜூ கதைக்குள் வருகிறார். அவர் ஏன் குழந்தையை விட்டு விலகினார், மீண்டும் குழந்தைக்காக ஏன் திரும்பி வருகிறார், சூர்யாவுக்கும் அவருக்கும் இடையிலான உறவு எந்தப் பாதையில் செல்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

Related Articles

Related image1
Vishwanath and Sons Review : சூர்யாவின் ஃபீல் குட் படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
Related image2
சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரீமேக் படமா? வெடித்த புது சர்ச்சை - உண்மை என்ன?
35
குவியும் பாராட்டு
Image Credit : Asianet News

குவியும் பாராட்டு

சூர்யா கதையின் நாயகனாக இருந்தாலும், கதையின் பெரும்பகுதியை முன்னெடுத்துச் செல்பவர் மமிதா பைஜூ. ஆரம்பத்தில் குழந்தையின் மீது அதிக ஈடுபாடு காட்டாதவர், பின்னர் அதன் மீதான பாசத்தில் உருகும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அதேபோல், ராதிகாவுடன் உருவாகும் உறவிலும், சூர்யாவிடம் தனது மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்லும் தருணங்களிலும் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது.

விஸ்வநாத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா, தனது நடிப்பில் எந்தவிதமான செயற்கைத்தனத்தையும் காட்டாமல் கதாபாத்திரத்திற்கேற்ற அளவில் நடித்திருக்கிறார். தனது கடந்த கால செயல்களை நினைத்து சங்கடப்படுவது, தந்தை மீதான கோபத்தை வேறொருவர் மீது வெளிப்படுத்தியதற்கான குற்ற உணர்வு, பின்னர் உண்மையைப் புரிந்துகொண்டு குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய முயல்வது என பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார்.

45
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் எப்படி இருக்கு?
Image Credit : Youtube/ Sithara Entertainments

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் எப்படி இருக்கு?

ராதிகாவுக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. சூர்யா மற்றும் மமிதா பைஜூ கதாபாத்திரங்களுக்கு இடையே ஒரு முக்கியமான இணைப்பாக செயல்படும் அவர், பல காட்சிகளில் நகைச்சுவையையும் கலகலப்பையும் சேர்க்கிறார். அவரது அனுபவம் இந்த கதாபாத்திரத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. படத்தின் முதல் பாதி குடும்ப பின்னணி மற்றும் நகைச்சுவை கலந்த காட்சிகளால் விறுவிறுப்பாக நகர்கிறது. கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகள் உருவாகும் விதமும், அடுத்தடுத்து வரும் சம்பவங்களும் ரசிக்க வைக்கின்றன.

ஆனால் இரண்டாம் பாதியில் படத்தின் வேகம் சற்று தடுமாறுகிறது. திரைக்கதை தெளிவான பாதையை விட்டு சில இடங்களில் விலகிச் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யத்தை இரண்டாம் பாதி முழுமையாகத் தக்கவைக்க முடியாதது படத்தின் முக்கிய குறையாகத் தெரிகிறது. மற்றபடி படம் சூப்பராக இருக்கிறது.

55
பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?
Image Credit : stockPhoto

பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்த வண்ணம் இருக்க, மறுபுறம் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் கலெக்‌ஷனை அள்ளி உள்ளது. அதன்படி ரிலீஸ் ஆன முதல் நாளே உலகளவில் ரூ.27.51 கோடி வசூலை வாரி சுருட்டி இருக்கிறது என சாக்னில்க் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ. 17.51 கோடி வசூலித்துள்ளது. இதில் இப்படத்தின் தமிழ் வெர்ஷன் அதிகபட்சமாக ரூ.9.15 கோடியும், தெலுங்கு வெர்ஷன் ரூ.6 கோடியும் வசூலித்துள்ளது. ஓவர்சீஸில் இப்படம் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாம். முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படம் முதல் நாளில் ரூ.21 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. ஆனால் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் ரூ.27.51 கோடி வசூலித்து மாஸ் காட்டி உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : மனோஜுக்கு அடித்த ஜாக்பாட்... விஜயாவுக்கு வந்த சந்தேகம்! அடுத்து என்ன நடக்கப்போகுது?
Recommended image2
சுதந்திர தினத்தில் பார்க்க வேண்டிய 9 சூப்பர் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ
Recommended image3
Karthigai Deepam : வீட்டை அடித்து நொறுக்கிய சாமுண்டீஸ்வரி... பரமேஸ்வரி பாட்டி வீட்டில் கார்த்திக் - ரேவதிக்கு நடந்தது என்ன?
Related Stories
Recommended image1
Vishwanath and Sons Review : சூர்யாவின் ஃபீல் குட் படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
Recommended image2
சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரீமேக் படமா? வெடித்த புது சர்ச்சை - உண்மை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved