simbu new movie release date : வாவ் செம அப்டேட்..வெந்து தணிந்தது காடு எப்ப ரிலீஸ் தெரியுமா?..
simbu new movie release date : மாநாடு வெற்றியை தொடர்ந்து வெளிவரவுள்ள சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வரும் தமிழ் புத்தாண்டில் வெளியாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது..
மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. கவுதம் மேனன் (Gautham Menon) இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் (AR Rahman) இசையமைக்கிறார். இப்படத்தின் சிம்புவுக்கு ஜோடியாக புதுமுக நடிகை காயடுலோஹர் நடிக்கிறார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
‘வெந்து தணிந்தது காடு’ (Vendhu Thanindhathu Kaadu) படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடந்த நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ள சிம்பு (simbu), தன்னுடைய பாணியில் இருந்து சற்று மாறி, மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் முத்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்புவின் பயணத்தை விவரிக்கும் விதமாக இந்த கிளிம்ப்ஸ் வீடியோ அமைந்துள்ளது.
மேலும் பின்னணியில் ஏ.ஆர்.ரகுமானின் குரலில் ஒலிக்கும் மறக்குமா நெஞ்சம் என்கிற பாடல் மனதை வருடும் விதமாக உள்ளது. சோகம், சிரிப்பு, ஆக்ஷன், எமோஷன் என அனைத்திலும் கெத்து காட்டி இருக்கிறார் சிம்பு. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது..அதாவது முழு படமும் முடிவடைய இன்னும் 7 நாட்கள் சூட்டிங் மட்டுமே மிதமிருப்பதாகவும்.. மும்பையில் பிஸியாக படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள குழு வெந்து தணிந்தது காடு படத்தை வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீஸ் செய்ய உத்தேசித்துள்ளதாகவும் ஹாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது..