எஸ்.டி.ஆர். என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சிம்பு அண்மையில் தான் அவரது 37வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன்  கேக் வெட்டி கொண்டாடினார். இதனிடையே கால்ஷீட் சொதப்பல்களால் நீண்ட நாட்களாக ஷூட்டிங்கில் பங்கேற்காமல் இருந்த சிம்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு மஹா படப்பிடிப்பில் கலந்துகொண்டார். முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட சிம்புவின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது. 

இதையும் படிங்க:  காதலர் விக்னேஷ் சிவனுக்காக பிரபல நடிகையிடம் தூது போன நயன்தாரா... கோலிவுட்டில் பரபரப்பு...!

இந்த படத்தில் ஏற்கவே விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் சிம்பு பிறந்தநாளான்று இயக்குநர் பாராதிராஜாவின் மகனான மனோஜ், பிக்பாஸ் பிரபலம் டோனி, ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா ஆகியோரும் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அந்த படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்க உள்ளார். 

இதையும் படிங்க:  காதலர் விக்னேஷ் சிவனுக்காக பிரபல நடிகையிடம் தூது போன நயன்தாரா... கோலிவுட்டில் பரபரப்பு...!

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 19ம் தேதி தொடங்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சிம்பு தங்கை இலக்கியா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: இதுக்கு போடாமலே இருக்கலாம்... ஓவர் கிளாமர் டிரெஸில் பிக்பாஸ் சாக்‌ஷி... மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

 

அதில் இலக்கியாவின் மகன் ஜேசன் அபியுடன் சிம்பு இருக்கிறார். மாநாடு படத்திற்காக செம்மையா ஓர்க் அவுட் செய்து மாஸ் லுக்கிற்கு மாறியுள்ள சிம்புவின் இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.