தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகனாக மாறியவர் நடிகர் சிம்பு. சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத இவர், மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசும் வெகு சில பிரபலங்களில் ஒருவர். நடிப்பை தாண்டி, பாடல், மியூசிக் என தன்னுடைய தந்தையை போலவே பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சிம்புவின் சகோதரர், குறளரசனுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்த நிலையில், பலர் சிம்புவிற்கு எப்போது திருமணம் என்கிற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வந்தனர்.

சிம்புவின் பெற்றோர் டி.ராஜேந்தர் மற்றும் உஷா டி.ராஜேந்தர் ஆகியோர், தற்போது, சிம்புவிற்காக ஒரு பெண்ணை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அவர் உஷா டி.ராஜேந்தரின் உறவுக்கார பெண் என்றும், விரைவில் சிம்புவின் திருமணம் குறித்த செய்தி வெளியாகும் என கூறப்படுகிறது. 

தற்போது சிம்பு, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும், 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். குறிப்பாக இந்த படத்திற்காக லண்டன் சென்று, உடல் எடையை குறிக்க சிகிச்சை பெற்று இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.