சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து இளைஞனாக சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் விருந்தாக இன்று வெளியாகியுள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்பு நடித்த திரைப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். நேற்று முதலே தியேட்டர்களில் பேனர்கள் வைப்பதில் ஆரம்பித்து, அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சிக்காக பட்டாசு வெடித்து தெறிக்கவிடுவது வரை கொண்டாடி தீர்த்தனர். 

இந்நிலையில் சிம்பு ரசிகர்களுக்கு மாநாடு படக்குழுவினர் மற்றொரு ஸ்பெஷல் ட்ரீட்டை கொடுத்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

மாநாடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரம்ஜான் பண்டிக்கைக்கு படத்தை வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. 

இதையும் படிங்க: பொன் நகை அணிந்து புன்னகையுடன் பொங்கல் வைத்த நயன்தாரா... வைரலாகும் அழகு போட்டோ...!

தற்போது பொங்கலை முன்னிட்டு ‘மாநாடு’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கையில் துப்பாக்கியுடன் அரசியல் மாநாட்டுக்குள் சிம்பு இருக்க, வெடிகுண்டு வெடிக்கிறது. யுவன் சங்கர்ராஜாவின் இசையுடன் வெளியிடப்பட்டுள்ள மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.