இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் முழுக்க முழுக்க கிராமத்து கதையான ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடித்து வந்தார். திண்டுக்கல்லில் கடந்த சில வாரங்களாக ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், முழு மூச்சுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்பு நடித்து முடித்துவிட்டார். படத்தின் டிரெய்லரை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

மேலும் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து விட்டதால், தற்போது படக்குழு  போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படு தீவிரமாக இறங்கியுள்ளனர். இவர் தன்னுடைய டப்பிங் பணியையும் சிம்பு முடித்துக் கொடுத்துவிட்டார். பொங்கல் விருந்தாக ஈஸ்வரன் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது முழு வீச்சுடன் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சிம்பு, ஈஸ்வரன் படத்தை முடித்த கையோடு ரேஸ்ட் கூட எடுக்காமல் மாநாடு ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். 

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னை, ஐதராபாத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து கொரோனா பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாண்டியில் முன்றாம் கட்ட ஷூட்டிங்கை படக்குழு தொடங்கியுள்ளது. 

இதையும் படிங்க: நயன்தாராவிற்கு ‘நோ’ சொன்ன தளபதி விஜய்... முடியாதுன்னு ஒத்த வார்த்தையில் முடிச்சிட்டாராம்...!

சிம்பு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் ஷூட்டிங்கில் பங்கேற்று வரும் நிலையில், யாருக்கும் கொரோனா பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெளிவாக உள்ளாராம். அதனால் படக்குழுவினரை பரிசோதித்து முறையாக பார்த்துக்கொள்ளும் பொறுப்பை சித்த மருத்துவர் வீரபாபுவிடம் ஒப்படைத்துள்ளாராம். ஏற்கனவே படக்குழுவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது வீரபாபு தலைமையிலான மருத்துவக்குழு படக்குழுவினருக்கு காலையும், மாலையும் மூலிகை கசாயம் வழங்குவது, ஆரோக்கியமான உணவு முறையை பரிந்துரைப்பது போன்ற வேலைகளை மேற்கொண்டு வருகிறார்களாம்.