நேற்று தியேட்டர்களில் மாஸ்டர் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில், இன்று தியேட்டர்கள் அனைத்திலும் ஈஸ்வரன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் இன்று பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து இளைஞராக சிம்புவும், அவருடன் நிதி அகர்வால், பாரதிராஜா, காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்காகவே 30 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறினார் சிம்பு. தனக்கு சிறப்பான கம்பேக்காக இருக்கும் என சிம்பு நினைத்திருக்கும் ஈஸ்வரன் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

Scroll to load tweet…

நேற்று தியேட்டர்களில் மாஸ்டர் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில், இன்று தியேட்டர்கள் அனைத்திலும் ஈஸ்வரன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவு முதலே தியேட்டர்களில் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். 

Scroll to load tweet…

பெரிய கட் அவுட்கள் வைக்க அனுமதி இல்லை என்பதால் மிகப்பெரிய ஈஸ்வரன் பட பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்து அமர்களப்படுத்தியுள்ளனர். 

Scroll to load tweet…

இதையும் படிங்க: கழுத்தில் தாலியுடன் சிம்பு பக்கத்தில் ஜம்முன்னு அமர்ந்திருக்கும் நிதி அகர்வால்... வைரலாகும் ஈஸ்வரன் ...!

சிம்பு ரசிகர்களை கவர்வதற்காகவே ரோகினி தியேட்டரில் டைட்டில் கார்ட் வரும் போது வண்ண விளக்குகளை வைத்து மேஜிக் காட்டியுள்ளது எஸ்.டி.ஆர்.பேன்ஸை ஆராவாரத்துடன் கொண்டாட வைத்துள்ளது.