பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வல்லவன் படத்தில் இடம்பெற்ற லூசுப் பெண்ணே பாடலுக்கு நடிகர் சிம்பு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

பத்து தல படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இப்படத்தில் ஏஜிஆர் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருக்கிறார். இப்படம் மணல் மாஃபியாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிம்பு, கவுதம் கார்த்திக், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதுமட்டுமின்றி சிம்புவின் ரசிகர்களும் கடல்போல் திரண்டு வந்து கலந்துகொண்டதால், நேரு உள்விளையாட்டு அரங்கமே அதிர்ந்தது.

இதையும் படியுங்கள்... 'பத்து தல' ஆடியோ லான்ச்... நியூ கெட்டப்பில் கோட் - சூட் அணிந்து செம்ம மாஸாக என்ட்ரி கொடுத்த சிம்பு! போட்டோஸ்!

இந்நிலையில், பத்து தல இசை வெளியீட்டு விழா கோர்ட் சூட் அணிந்து கெத்தாக வந்து கலந்துகொண்ட நடிகர் சிம்பு, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் நடனமாடியும் அசத்தினார். குறிப்பாக வல்லவன் படத்தில் இடம்பெறும் லூசுப் பெண்ணே பாடலுக்காக சிம்பு ஆடிய வெறித்தனமான நடனத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போயினர். வல்லவன் படத்தில் எப்படி ஆடினாரோ, அதே எனர்ஜியுடன் பத்து தல ஆடியோ லாஞ்சிலும் சிம்பு ஆடி இருந்தார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன.

Scroll to load tweet…

அதேபோல் நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச இசைக் கலைஞரான ஏகான் உடன் இணைந்து லவ் ஆன்தம் என்கிற சுயாதீன பாடல் ஒன்றை உருவாக்கினார். அந்த பாடலுக்கும் நடன இயக்குனர் சாண்டி உடன் சேர்ந்து பத்து தல ஆடியோ லாஞ்சில் சிம்பு ஆட்டம் போட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... 'பத்து தல' இசைவெளியீட்டு விழாவில் விஜய், தனுஷ், கமல்... சிம்புவுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!