சிம்பு, தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்', திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி நடக்கிறது. 

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலில்... துருவ நட்சத்திரம் படத்தை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கவிருக்கும் புதிய படத்தில், சிம்பு மற்றும் அனுஷ்கா இணைய உள்ளதாக கூறப்படுதிறது.

சிம்பு ரசிகர்கள் மத்தியில் மிகபெரிய வரவேற்ப்பை பெற்ற 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் என்றும், ஆனால் இந்த படத்திற்கு 'விண்ணைத்தாண்டி வருவேன்' என தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் திரிஷாவுடன் ஜோடி போட்ட சிம்பு இதில் அனுஷகாவுடன் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் இந்த படத்திற்காக சிம்பு மற்றும் அனுஷ்காவுடன் கெளதம் மேனன் பேச்சு வார்த்தை நடந்தி வருவதாகவும் தகவல் வெளியாகியள்ளது.

அனுஷ்காவும், 'பாகமதி' படத்தை தொடர்ந்து எந்த புதிய படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்த நிலையில், இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி இந்த படத்தில் இவர் நடித்தால், வானம் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த படத்தில் அனுஷ்கா சிம்புவுடன் இணைந்து நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலால் சிம்பு ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.