கோயிலுக்கு திருட்டுத்தனமா போவேன்; கமல் மகளுக்கு இவ்வளவு கடவுள் பக்தியா?
நடிகர் கமல்ஹாசன் - நடிகை சரிகா ஜோடியின் மகளான ஸ்ருதிஹாசன் தனக்கு இருக்கும் கடவுள் நம்பிக்கை பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
கமல் ஹாசன் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன், அவரது வாழ்க்கையில நடந்த சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறார். அதில் அப்பா கமல் ஹாசனும், அம்மா நடிகை சாரிகாவும் பிரிந்த பிறகு, அவங்க வாழ்க்கையில நடந்த கஷ்டமான கதைகளை எல்லாம் வெளிப்படையாக ஸ்ருதியிடம் சொல்லி இருக்கிறார்களாம். அப்பா அம்மா பிரிஞ்சதுனால தான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதையும் மன அழுத்தத்தில் இருந்ததையும் அவர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் அப்பாவுக்கு தெரியாமல் கோயிலுக்கு எப்படி கள்ளத்தனமாக போனேன் என்பது பற்றி ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
ஸ்ருதியின் அம்மா சரிகா ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவராம். ஆனால் கமல் ஹாசன் நார்த்திகர். அதனால வீட்ல யாரும் கோயிலுக்குப் போகக் கூடாதுன்னு சொல்லி இருந்தாராம். முதல் முறை, தாத்தா கூட கோயிலுக்குப் போனதை பற்றி ஸ்ருதிஹாசன் மனம்திறந்து பேசி இருக்கிறார்.
பிங்க் வில்லாவுக்குக் அளித்த பேட்டியில் கூறியதாவது : ‘எனக்குக் கடவுள் மேல நம்பிக்கை அதிகம். ஆனா, அப்பாவுக்கு கடவுள் மேல நம்பிக்கை இல்லாததால் எங்களால் கோயிலுக்குப் போக முடியாம இருந்தது..அதனால் கள்ளத்தனமா கோயிலுக்குப் போயிடுவேன். அடிக்கடி சர்ச்சுக்கும் போவேன். ஆனா, ரொம்ப நாளைக்கு இது அப்பாவுக்குத் தெரியாது. தாத்தா கூடப் போனாலும், அப்பாகிட்ட சொல்லக் கூடாது’ன்னு சொல்லி தான் கூட்டிட்டு போவேன்.
இதையும் படியுங்கள்... லிவிங் டூ கெதர் ஓகே பட் கல்யாணம் வேண்டாம்! அப்பா கமல்ஹாசனையே மிஞ்சிவிட்டாரா மகள் ஸ்ருதி!
நான் இன்னைக்கு இந்த நிலைமையில இருப்பதற்கும், தைரியமா இருக்குறதுக்கும் காரணம் கடவுள் மேல உள்ள நம்பிக்கைதான். ஆனா, இது அப்பாவுக்குப் பிடிக்காது. எங்க வீடு முழுக்க நார்த்திகம்தான். அம்மா கடவுள் பக்தி உள்ளவங்கன்னாலும், அதை வெளிய சொல்லக் கூடாது. நான் வளர்றப்போ, எங்களுக்குக் கடவுள் அப்படிங்குறது இல்லவே இல்ல. ஆனா, கடவுள் சக்திய நானே கண்டுபிடிச்சேன், புரிஞ்சுக்கிட்டேன்.
நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்த இவர், தற்போது தமிழில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான கூலியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறார்.
இதையும் படியுங்கள்... ஸ்ருதி மட்டுமில்ல கூலி படத்தில் லோகேஷ் ஒளித்துவைத்துள்ள 2வது ஹீரோயின் யார் தெரியுமா?