show the theater collection accounts by actor vishal

சென்னை கிண்டியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், தற்போது தயாரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியாக விளங்கும், திருட்டு விசிடி மற்றும் புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிடப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இந்த விவகாரத்தில் மத்தி அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், படப்பிடிப்புகளை ரத்து செய்வதோடு, திரைப்படங்களை வெளியிடாமல் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய நடிகர் விஷால் திரையரங்குகள் திறக்க அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் அதே போல திரையரங்கில் வசூலாகும் தொகை குறித்து வெளிப்படையாக கணக்கு காண்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்தார்.