பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் தற்கொலைக்கு பாலிவுட் திரையுலகின் வாரிசு அரசியலும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமும் தான் காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து பாலிவுட் ரசிகர்களின் கோபம் வாரிசு நடிகர்கள், நடிகைகள் மீது திரும்பியது. 

மேலும் செய்திகள்: சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா ? வாங்க பார்க்கலாம்!
 

அதிலும் குறிப்பாக நடிகை ஆலியா பட் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர். இதற்க்கு முக்கிய காரணம், பேட்டி ஒன்றில்... சுஷாந்த் சிங் ஒரு நடிகரா என மிகவும் ஏளனமாக விமர்சித்தார் ஆலியா. மேலும் நெபோடிசம் பிரச்சனையால் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 லட்சத்திற்கும் அதிகமானோரை இழந்துள்ள ஆலியா பட்.

இருப்பினும் சில நாட்களுக்கு பின் ரசிகர்கள் தன மீது உள்ள கோவத்தை மறந்து விடுவார்கள் என நினைத்த ஆலியாவுக்கு, செம்ம ஷாக் கொடுத்துள்ளனர் ரசிகர்கள். ஆனால் இவர் மீது உள்ள கோபம் சற்றும் தணியவில்லை ரசிகர்களுக்கு.

மேலும் செய்திகள்: தனிஒருவன் படத்தில் அரவிந்த் சாமிக்கு பதில் நடிக்க இருந்தது இவர் தான்! மிஸ் செய்த நடிகர் யார் தெரியுமா?
 

இதனால் தனது புது பட அறிவிப்பை கூட நெட்டிசன்களுக்கு பயந்து வேற லெவலுக்கு செய்திருந்தார். ஓடிடி-யில் வெளியாக உள்ள தனது சடக் 2 படம் குறித்து அறிவிக்கும் போது கூட கமெண்ட் செக்‌ஷனை ஆப் செய்துவிட்டே சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். 

தற்போது மகேஷ் பட் இயக்கத்தில் அவரது மகள்கள் அலியா பட், பூஜ பட் நடித்திருக்கும் 'சடக் 2'  படத்தின் டிரெய்லர் இன்று யூ-டியூப்பில் வெளியிடப்பட்டது. கொரோனா லாக்டவுன் நேரத்தில் தனது பட டிரெய்லர் லட்சக்கணக்கில் வியூஸ்களை அள்ளி சாதனை படைக்கும் என ஆசையாய் காத்திருந்த ஆலியா பட்டிற்கு சுஷாந்த ரசிகர்கள் செம்ம அதிர்ச்சி கொடுத்துள்ளனர். 

படத்தின் டிரெய்லர் யூ-டியூப்பில் வெளியான 3 நாட்களில், 8 மில்லியனுக்கும் அதிகமான டிஸ்லைக்குகளை பெற்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் மிக குறைவான லைக்குகள் மட்டுமே சதக் 2 படத்திற்கு கிடைத்துள்ளது. இதனால் ஆலியாவை மற்ற படங்களில் கூட கமிட் பண்ண பாலிவுட் திரையுலகினர் யோசித்து வருகிறார்கள். அதே நேரத்தில் ராஜமௌலி முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.