தனது மகள் குறித்து ஷோபா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக நடிகர் விஜய் திகழ்ந்து வருகிறார். அவருக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, விஜய் 90-களில் ஹீரோவாகி, பின்னர் வளர்ந்து வரும் நடிகர், உச்ச நடிகர் என படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார். மேலும் இன்று இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் விஜய் இருக்கிறார்.
இளைய தளபதியாக இருந்த விஜய் தற்போது தளபதியாக மாறி கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். மேலும் விஜய் படம் என்றால் கட்டாயம் 100 கோடி வசூலை அசால்ட்டாக கடக்கும் என்று என்பதால் அவரை பாக்ஸ் ஆபீஸ் கிங் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் குடும்பத்தினர் பற்றி நிச்சயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பிரபல இயக்குனர், தாய் ஷோபா பின்னணி பாடகியாக இருந்தவர். மேலும் விஜய்க்கு வித்யா ஒரு தங்கை இருந்ததும் அவர் சிறு வயதிலேயே உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும். விஜய்யின் தங்கை பற்றி ஷோபா சந்திரசேகர் பல இடங்களில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தனது மகள் குறித்து ஷோபா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசியுள்ள ஷோபா “ எனது மகளை தான் நான் இப்போது வரை ரொம்ப மிஸ் பண்றேன்.. மூன்றரை வயதில் மறைந்த அந்த குழந்தை இப்போது உயிருடன் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.. அவள் பிறந்த பிறகு தான் எங்களுக்கு பல முன்னேற்றங்கள் ஏற்பட்டது. அவள் பிறந்த பிறகு அவரின் முதல் படம் வெளியானது. அதன் பிறகே நாங்கள் கொஞ்சம் காசு பார்க்க தொடங்கினோம். அவள் பெயர் வித்யா. அவளுக்கு விஜய்க்கும் 6 வயது வித்தியாசம். ஆனா, டேய் அண்ணா என்று தானு விஜய்யை கூப்பிடுவாள். ஆனால் அவள் இல்லாதது எங்களுக்கு பேரிழப்பு.. எந்த பெண் குழந்தைகளை பார்த்தாலும், எங்களுக்கு ஆசையாக இருக்கும்” என்று உருக்கமாக பேசினார்.
'லியோ' ஆடியோ லான்ச் ரத்து! நல்ல முடிவு... இது தான் உண்மை பின்னணி! பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்!
இதே போல் விஜய்யின் தந்தை சந்திர சேகர் பேசிய போது “ எங்கள் எல்லோரிடமும் அந்த தாக்கம் இன்றும் இருக்கிறது. அந்த வயதிலேயே நன்றாக பாடுவாள்.. ஸ்டைலாக தான் இருப்பாள்.. அவள் இறந்த போது, விஜய் வித்யா என்று கத்தினார். மறக்கவே முடியாது. கண்டிப்பா நாங்கள் அவளை தான் மிஸ் செய்கிறோம்.” என்று தெரிவித்தார்.
