பிக்பாஸ் வீட்டில் நேற்று முன் தினம், "தங்கமே உன்னை தான் தேடி வந்தேன் நானே", என்கிற டாஸ்க் நடத்தபட்டது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் சேர்த்த தங்கங்களை நேற்று பிக்பாஸ் அறையில் எடைபோட்டு காட்டினர். பாலா தான் இதில் அதிக பட்சமாக 3 கிலோவுக்கு மேல் சேகரித்திருந்தார்.

மேலும் பிக்பாஸ் நேற்று மொத்தம் உள்ள போட்டியாளர்களை மூன்று அணிகளாக பிரிய சொல்லி கூறினார். எந்த அணியிடம் அதிக தங்கம் உள்ளதோ அந்த அணிக்கு, பிக்பாஸ் வீட்டில் கூடுதல் பவர் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதன்படி அதிக தங்கம் வைத்திருந்த, அணியில்... பாலா, ரியோ, அர்ச்சனா, உள்ளிட்ட 8 பேர் வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் வெற்றி பெற்றதால், பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு வேலையையும் அவர்கள் செய்ய வேண்டியது இல்லை என்றும், மற்றவர்கள் தான் அவர்கள் சொல்லுவதை அனைத்தையும் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

அந்த டாஸ்க் இன்றும் தொடர்கிறது, பாலா ஷிவானிக்கு தான் செல்லும் இடமெல்லாம் குடை பிடித்து வர வேண்டும் என கூற, ஷிவானியும் பாலா பின்னாடியே சுற்றுவது இந்த டாஸ்கில் இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் விரைவில் இவர்களுக்குள் காதல் தீ பற்றி கொள்ளுமோ... என்கிற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.