'மாவீரன்' படத்தின் முக்கிய பணியை முடித்த சிவகார்த்திகேயன்! புகைப்படத்துடன் வெளியான தகவல்..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் முக்கிய பணி நிறைவடைந்துள்ளதை புகைப்படத்துடன் தெரிவித்துள்ளது படக்குழு.
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர் - நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், ஒரே மாதிரியான கதையை தேர்வு செய்து நடிக்காமல்... தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம், 'மாவீரன்' இயக்குனர், மடோன் அஸ்வின் இயக்கத்தில், உருவாக்கியுள்ள இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
மேலும் இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடித்திருந்த 'விருமன்' திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாவது படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில், சுனில், யோகி பாபு, சரிதா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே, முடிந்துவிட்ட நிலையில்... போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. அதன்படி தற்போது இந்த படத்தின், முக்கிய பணி ஒன்று முடிந்து விட்டதாக படக்குழு தற்போது, அறிவித்துள்ளது அதன்படி சிவகார்த்திகேயன் தன்னுடைய டப்பிங் பணியை முடித்துள்ளார்.
இது குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், உருவாக்கி உள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ளது ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில்... மற்ற சில பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது சிவகார்த்திகேயன் டப்பிங் ஸ்டுடியோவில் இருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. மாவீரன் படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.