பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தன்னுடைய மகள் சுஹானா கானுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்து வருகிறார். மேலும் தன்னுடைய மகளுக்கு பிடித்த அனைத்தையும் செய்து கொடுப்பவர். கடந்த ஆண்டு கூட தன்னுடைய மகளுடன் டேட்டிங் செய்ய வேண்டும் என்றால் இந்த தகுதிகள் இருக்க வேண்டும் என கூறி அனைவருக்கும் அதிர்ச்சிக் கொடுத்தார்.

இந்நிலையில் இவருடைய மகள் சுஹானாகான், நேற்று பிகினி உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அது மிகவும் வைரலாக சென்ற நிலையில், தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் படி சில நொடி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். 

பிரபலங்களின் பிள்ளைகள் எது செய்தாலும் அது வைரலாக மாறிவிடும் என்பது அனைவரும் அறிந்தது தான். இதன் காரணமாகவே பாலிவுட் திரையுலகில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது சுஹானகான் செய்தி. 

இதன் மூலம் விரைவில், இவர் திரைப்படங்களுக்கு நடிக்க வரலாம் என்றும் கூறப்படுகிறது.