MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • LIK முதல் தாய் கிழவி வரை... ஏப்ரல் 10ந் தேதி தியேட்டர் & ஓடிடியில் கோடை விருந்தாக வர உள்ள படங்கள் என்னென்ன?

LIK முதல் தாய் கிழவி வரை... ஏப்ரல் 10ந் தேதி தியேட்டர் & ஓடிடியில் கோடை விருந்தாக வர உள்ள படங்கள் என்னென்ன?

கோடை விடுமுறை ஆரம்பமாகி உள்ளதால் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் புதுப்படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ளன. ஏப்ரல் 10ந் தேதி என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 06 2026, 09:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்
Image Credit : X

தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை லலித் குமார் மற்றும் நயன்தாரா ஆகியோர் தயாரித்துள்ளனர். கீர்த்தி ஷெட்டி, சீமான், கெளரி கிஷான், எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ரவிவர்மன் மேற்கொண்டுள்ளார். இப்படம் ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது.

26
TN 2026
Image Credit : X

TN 2026

ஏப்ரல் 10-ந் தேதி கோலிவுட்டில் புயலை கிளப்ப காத்திருக்கும் மற்றுமொரு திரைப்படம் TN 2026. அரசியல் கதையம்சம் கொண்ட இப்படம் நடிகர் விஜய்யை ட்ரோல் செய்யும் விதமாக எடுக்கப்பட்டு இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. தற்போது தேர்தல் காலகட்டம் என்பதால் அதற்கு ஏற்றார் போல் இப்படம் இருப்பதால், இதற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. உமாபதி இயக்கிய இப்படத்தில் நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

Related Articles

Related image1
எலெக்‌ஷன் அன்று நயன்தாரா படம் ரிலீஸ் ஆகாது... 'Patriot' பட ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
Related image2
ரஜினிக்கு பயந்து பின்வாங்குகிறாரா விஜய்? ஜனநாயகன் பட ரிலீஸ் பற்றி வந்த ஷாக்கிங் அப்டேட்
36
மனிதன் தெய்வமாகலாம்
Image Credit : Saregama Tamil You Tube

மனிதன் தெய்வமாகலாம்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் மனிதன் தெய்வமாகலாம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக குஷி ரவி நடித்துள்ளார். மேலும் கெளசல்யா இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். ரவி வர்மா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், ஏகே பிரியன் இசையமைத்துள்ளார். இப்படமும் வருகிற ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வருகிறது.

46
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்
Image Credit : Asianet News

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்

ஏப்ரல் 6 முதல் 12 வரை நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் பல புதுப் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாக உள்ளன. சர்வைவல் த்ரில்லர், ரொமான்டிக் ஆக்‌ஷன், பிராந்திய மொழிப் படங்கள் என இந்த வாரம் ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது.

தாய் கிழவி (Thaai Kizhavi)

இந்த பிராந்திய மொழித் திரைப்படத்தை, உணர்ச்சிகரமான கதையால் ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாக்கியுள்ளனர். குடும்பம் மற்றும் உறவுகளைச் சுற்றி கதை நகர்கிறது. இது ஏப்ரல் 10ந் தேதி அன்று JioHotstar-ல் வெளியாகிறது.

Tu Yaa Main

ஒரு முதலைக்கு நடுவில் சிக்கிக்கொண்ட ஒரு ஜோடியின் கதைதான் இந்த 'Tu Yaa Main' சர்வைவல் த்ரில்லர். இந்த ஆபத்தில் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை. இது ஏப்ரல் 10 முதல் Netflix-ல் ஸ்ட்ரீம் ஆகிறது.

56
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
Image Credit : Asianet News

இந்த வார ஓடிடி வெளியீடுகள்

Big Mistakes

வாழ்க்கையை மாற்றும் முடிவுகள் மற்றும் எதிர்பாராத விளைவுகளைப் பற்றிய டிராமா காமெடி சீரிஸ் இது. சாதாரண வாழ்க்கையில் செய்யும் பெரிய தவறுகள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த சீரிஸ் காட்டுகிறது. இது ஏப்ரல் 9ந் தேதி Netflix-ல் ரிலீஸ் ஆகிறது.

ORomeo

ஷாஹித் கபூர் நடிக்கும் இந்த ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர், க்ரைம் உலகில் நடக்கும் காதல் மற்றும் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டது. இது ஏப்ரல் 10 அன்று Amazon Prime Video-வில் வெளியாகிறது.

66
ஓடிடி ரிலீஸ்
Image Credit : Asianet News

ஓடிடி ரிலீஸ்

The Boys

இந்த சீரிஸின் கடைசி சீசன், அதிக ஆக்‌ஷன் மற்றும் பதட்டத்துடன் வரவிருக்கிறது. ஊழலும் குழப்பமும் உச்சத்தை அடையும்போது, இறுதிப் போராட்டம் நடக்கிறது. இது ஏப்ரல் 8 முதல் Amazon Prime Video-வில் பார்க்கலாம்.

Star Wars Maul Shadow Lord

ஸ்டார் வார்ஸ் உலகின் முக்கிய வில்லனான டார்த் மால் எப்படி உருவானார் என்பதை இந்த சீரிஸ் காட்டுகிறது. க்ரைம் உலகில் அவரது பயணமே இதன் முக்கிய கதைக்களம். இது ஏப்ரல் 6 முதல் JioHotstar-ல் ஸ்ட்ரீம் ஆகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Leader Day 3 Box Office : லட்சங்களில் இருந்து கோடிகளுக்கு தாவிய லீடர்... வசூலில் தூள் கிளப்பிய அண்ணாச்சி..!
Recommended image2
குணசேகரனை மாட்டிவிட ஜனனியோடு கூட்டு சேரும் அறிவுக்கரசி... எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image3
ரவியை புருஷனாக்கிய நீத்து; பதறிப்போன ஸ்ருதி... மனோஜுக்கு குட்நியூஸ் சொன்ன ஸ்வேதா - சிறகடிக்க ஆசை
Related Stories
Recommended image1
எலெக்‌ஷன் அன்று நயன்தாரா படம் ரிலீஸ் ஆகாது... 'Patriot' பட ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
Recommended image2
ரஜினிக்கு பயந்து பின்வாங்குகிறாரா விஜய்? ஜனநாயகன் பட ரிலீஸ் பற்றி வந்த ஷாக்கிங் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved