MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Leader Day 3 Box Office : லெஜண்டின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்... 3 நாட்களில் 25 கோடி வசூல் அள்ளிய லீடர்...!

Leader Day 3 Box Office : லெஜண்டின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்... 3 நாட்களில் 25 கோடி வசூல் அள்ளிய லீடர்...!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த லீடர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், அதன் 3ம் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Apr 06 2026, 12:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Leader Movie Day 3 Box Office
Image Credit : X/@yoursthelegend

Leader Movie Day 3 Box Office

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிசினஸ் மேனாக வலம் வருபவர் லெஜண்ட் சரவணன். இவரை இன்று பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது இவருடைய நடிப்பு தான். ஆரம்பத்தில் தன்னுடைய கடை விளம்பரங்களில் முன்னணி நாயகிகளோடு ஜோடி சேர்ந்து நடித்து ஒரு டிரெண்ட் செட்டராக மாறினார். அதன்பின்னர் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த அண்ணாச்சி, கடந்த 2022-ம் ஆண்டு வெளிவந்த லெஜண்ட் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கி இருந்தனர். அப்படம் பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.

25
கம்பேக் கொடுத்த லெஜண்ட்
Image Credit : X/@yoursthelegend

கம்பேக் கொடுத்த லெஜண்ட்

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன லெஜண்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அப்படத்தை கடுமையாக டிரோலும் செய்து வந்தனர். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத லெஜண்ட் சரவணன், எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு, தன்னுடைய இரண்டாவது படத்தை தேர்வு செய்தார். முதல் படத்தில் கண்டண்ட் சரியில்லாததாலும் சொதப்பலான திரைக்கதையாலும் சோபிக்க முடியாமல் போனது. இதனால் இம்முறை நல்ல கதையை தேர்வு செய்து நடிக்க முடிவெடுத்தார்.

Related Articles

Related image1
லெஜண்டின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? லீடர் விமர்சனம் இதோ
Related image2
Leader Box Office : வசூலில் நம்பர் 1 இடம்பிடித்த லீடர்... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
35
லெஜண்டின் லீடர்
Image Credit : X

லெஜண்டின் லீடர்

இதற்காக சுந்தர் சி உள்பட பல முன்னணி இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அண்ணாச்சி, இறுதியாக துரை செந்தில்குமாரை கமிட் செய்தார். அதிகளவில் சம்பளம் கொடுத்ததால், அவரும் லெஜண்ட் சரவணனை வைத்து படம் இயக்க சம்மதித்தார். அவருக்காக ஒரு தரமான ஸ்கிரிப்டை ரெடி செய்து, அதை தன்னுடைய ஸ்டைலில் இயக்கியும் இருந்தார். அந்த படம் தான் லீடர். அப்படத்தின் டீசர் வெளியானபோதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்துக்கு சென்றது. அதில் லெஜண்ட் சரவணின் ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போயினர்.

45
செம ரெஸ்பான்ஸ்
Image Credit : X/@yoursthelegend

செம ரெஸ்பான்ஸ்

லீடர் திரைப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாயல் ராஜ்புட் நடித்திருந்தார். மேலும் ஆண்ட்ரியா, விடிவி கணேஷ், ஷியாம், அறந்தாங்கி நிஷா, மதுரை முத்து என மிகப்பெரிய நட்சத்திர படையையே இப்படத்தில் நடிக்க வைத்திருந்த துரை செந்தில்குமார், முதல் பாதியை சற்று மெதுவாகவே நகர்த்திச் சென்றிருந்தாலும், இண்டர்வெல் காட்சியில் இருந்து டாப் கியருக்கு கொண்டு சென்று, இரண்டாம் பாதியை செம விறுவிறுப்பாக பல்வேறு ட்விஸ்ட் உடன் அமைத்து ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றார். இப்படம் லெஜண்ட் சரவணனுக்கு தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளது.

55
லீடர் பட வசூல் நிலவரம்
Image Credit : X

லீடர் பட வசூல் நிலவரம்

லீடர் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே பாசிடிவ் ரெஸ்பான்ஸ் பெற்றதால் அப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், அப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை படக்குழுவே வெளியிட்டு உள்ளது. அதன்படி லீடர் திரைப்படம் ரிலீஸ் ஆன மூன்றே நாட்களில் உலகளவில் ரூ.25 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இம்மாதம் வெளிவந்த தமிழ் படங்களில் அதிக வசூலை வாரி சுருட்டிய படம் என்றால் அது லீடர் தான்.வெளிநாட்டிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், இதன் வசூல் அங்கும் படிப்படியாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
விநியோகஸ்தர்களுடன் தயாரிப்பாளர் திடீர் சந்திப்பு - 'ஜன நாயகன்' படக்குழுவின் அதிரடி மூவ்
Recommended image2
தயாரிப்பாளரின் நஷ்டத்தை ஈடு செய்ய விஜய் எடுக்கும் அதிரடி முடிவு!
Recommended image3
கார் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பிரபல நடிகர் பலி - திரையுலகில் அதிர்ச்சி!
Related Stories
Recommended image1
லெஜண்டின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? லீடர் விமர்சனம் இதோ
Recommended image2
Leader Box Office : வசூலில் நம்பர் 1 இடம்பிடித்த லீடர்... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved