தல அஜித் தற்போது பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படமான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டு வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

இந்த படத்தை, சதுரங்க வேட்டை,  தீரன் அதிகாரம் ஒன்று, என வித்தியாசமான கதைகளை இயக்கி, வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இடைவிடாமல் நடந்து வருகிறது. சமீபத்தில் நடிகை வித்யா பாலன் மற்றும் அஜித் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்று முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், நடித்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை டாப்சி நடித்த அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்த படத்திற்காக தன்னுடைய டோடல் கெட்டப்பையே மாற்றி நடித்துள்ளார். 

தற்போது ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு புது லுக்கில் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை போட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் நேர்கொண்ட பார்வை படத்தில் இந்த கெட்டப்பில் தான் நடிக்கிறீர்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். என்ன சொல்வார் என பொறுத்திருந்து பார்ப்போம். 

 

View this post on Instagram

a bit extra

A post shared by Shraddha Srinath (@shraddhasrinath) on Mar 22, 2019 at 3:48am PDT