ராம்சரண் பிறந்தநாள் ஸ்பெஷல்... ‘கேம் சேஞ்சர்’ படத்தின் மெர்சலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ராம்சரணின் பிறந்தநாளான இன்று படக்குழு வெளியிட்டு உள்ளது.
தமிழில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் ஷங்கர். அவர் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் படம் கேம் சேஞ்சர். விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜு தான் இப்படத்தையும் தயாரித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இப்படத்தில் நடிகர் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். அரசியல் கதையம்சம் கொண்ட படமாக கேம் சேஞ்சர் தயாராகி வருகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் கதையை தான் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் எம்.பி. சு.வெங்கடேசன் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தை பான் இந்தியா அளவில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இதையும் படியுங்கள்... மாஸ் வீடியோ உடன்... ராம்சரண் உடனான பிரம்மாண்ட படத்தின் டைட்டிலை அறிவித்த இயக்குனர் ஷங்கர்
இப்படத்தின் நாயகன் ராம்சரண் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். அவருக்காக் நேற்றே படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய படக்குழு, அதனை வீடியோவாகவும் வெளியிட்டு இருந்தது. அதுமட்டுமின்றி இன்று ராம்சரண் பிறந்தநாள் பரிசாக கேம் சேஞ்சர் படத்தின் இரண்டு அப்டேட்டுகள் வெளியிடப்படும் என்றும் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது அப்டேட்டாக கேம் சேஞ்சர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளார். ராம்சரணின் ஸ்டைலிஷ் ஆன தோற்றம் அடங்கிய இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது. இப்படத்தை வருகிற 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவரவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... விடுதலை 2 முதல் இந்தியன் 2 வரை : 2023-ல் மட்டும் இத்தனை இரண்டாம் பாக படங்களா? லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது..!