பிக்பாஸ் சீஸன் 3 முடிய இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் தர்ஷனின் காதலி ஷனம் ஷெட்டி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது முன்னாள் காதல் கதைகளும் அவரால் ‘அம்புலி’பட ஹீரோ ஒருவர் தற்கொலை செய்துகொண்ட செய்திகளும் மீண்டும் வலைதளங்களில் பகிரப்பட்டு பரபரப்பாகி வருகின்றன.

 தர்ஷன் மாடலிங் செய்துக் கொண்டிருந்த போது அவருக்கு பல உதவிகளை செய்தவர் நடிகை சனம் ஷெட்டி. இதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் துவக்க தினங்களிலேயே தர்ஷன் கண்ணீர் மல்க அறிவித்தார். தர்ஷனின் அந்த வாக்கு மூலத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஷனம் ஷெட்டி ‘உனக்காகவே நான் வாழ்கிறேன்’என்கிற அளவுக்கு பில்ட் அப் தந்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் இல்லத்துக்கு திடீர் விருந்தாளிகளாக வந்த மோகன் வைத்யா, வனிதா, சாக்‌ஷி ஆகியோர் தர்ஷனுக்கும் ஷெரினுக்கும் காதல் இருப்பதாக புதிய கதை ஒன்றை கிளப்பி வருகின்றனர்.ஆனால், இதை மறுக்கும் ஷெரின் எனக்கும் தர்ஷனுக்கும் இடையே இருப்பது வெறும் நட்பு மட்டுமே, காதல் இல்லை, என்று தெளிவாக கூறிவிட்டார்.

 இந்த நிலையில் இந்த சீஸனின் டைட்டில் வின்னராக வரக்கூடிய வாய்ப்புள்ள தர்ஷனின் வாய்ப்புகள் மீது ஷனம் ஷெட்டியின் பேட்டிகள் மண் அள்ளிப்போடுவதாக பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதை ஒட்டி சனம் ஷெட்டியை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இந்த குற்றச்சாட்டுகளால் கதிகலங்கிப்போன சனம் ஷெட்டி ஒரு கண்ணீர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அழுதபடியே பேசும் அவர், ”தர்ஷனின் முன்னேற்றத்திற்காக நான் பலவற்றை செய்திருக்கிறேன். அவனுடன் எப்போதும் இருக்க வேண்டும், என்று தான் நான் விரும்புகிறேன். ஆனால், என்னால் தான் அவனது வெற்றி பறிபோகப்போகிறது, என்று ஒருவர் கூறுகிறார். அதனால், இனி நான் தர்ஷனை பற்றி பேசப்போவதில்லை, அவன் வாழ்வில் நான் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

 சனம் ஷெட்டியின் இந்த கண்ணீர் வீடியோவை பார்க்கும் போது பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அதாவது, கடந்த 2012 ஆம் ஆண்டு பார்த்திபன் நடிப்பில் வெளியான 3டி படமான ‘அம்புலி’ மூலம் தான் சனம் ஷெட்டி புதுமுகமாக  அறிமுகமானார். இதே படத்தில் ஹீரோவாக அறிமுகமான அஜய் என்பவர், சனம் ஷெட்டியை காதலித்தார். அவரது காதலை சனம் ஏற்க மறுத்ததால், அஜய் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார். சனம் ஷெட்டி தற்போது மீண்டும் லைம்லைட்டில் உள்ளதால் அஜயின் தற்கொலை செய்தி மீண்டும் வலைதளங்களில் உயிர்பெற்று வருகிறது.