சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் ஷாலு ஷம்மு, சமீப காலமாக சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதன் பின்னரும் ஷாலு ஷம்முவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தாலும் எப்படியாவது சினிமாவில் டாப் ஹீரோயினாக வந்தே தீருவேன் என முடிவு செய்துள்ள ஷாலு ஷம்மு, ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அவற்றை தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இதற்கு முன்னதாக ஆண் நண்பர் ஒருவருடன் கவர்ச்சி குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் செம வைரலானது.பிக்பாஸ் மீரா மிதுனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு ஷாலு ஷம்மு செம கவர்ச்சியான உடைகளில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

தற்போது மீண்டும் ஒரு ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ள ஷாலு ஷம்மு, அந்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படுக்கையறையில் நீல நிற சட்டையை மட்டும் அணிந்து கொண்டு ஃபிரியாக அமர்ந்திருக்கும் ஷாலு ஷம்மு, அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். பார்க்கும் பார்வையில் கூட கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் வகையில், பிளாக் அண்ட் ஒயிட் உடையில் ஷம்மு கொடுத்துள்ள ஹாட் போஸ்களும் நெட்டிசன்களை கலங்கடித்துள்ளது. உடை, பாவனை, பார்வை என அனைத்திலும் கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் ஷாலு ஷம்முவின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.