அனுபமா பரமேஸ்வரன் இவர் யாருன்னே தெரியுதா? ஆமாம், அதே சேச்சிதான் பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலமானார்,  தனுஷின் கொடி மூலம் தமிழிலும் நடிக்கத் தொடங்கினார்.  குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துவந்தார்.

திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்ட அவர், சமீபத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பும்ராவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட பின் அதற்கு முற்றுப்புள்ளி வைத்த அனுபமா, கடந்த சில நாட்களுக்கு முன்பாக முன்னணி வார இதழுக்காக  நடத்திய ஹாட் போட்டோ ஷூட்டில்  அனுபமா ஈரமான உடையணிந்து அளவான கவர்ச்சியை அழகாக வெளிப்படுத்தி போஸ் கொடுத்துள்ளார். அனுபமா இந்த ஹாட் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் செம்ம வைரல். வளச்சு வளச்சு எடுத்துருக்கியேமா.... 

பிக்பாஸ் வீட்டில், மீராவுக்கும் அபிராமிக்கு தான் சண்ட ஆனால், கேப்டனாக இருந்த சொர்ணாக்கா வனிதாவிடம் அபிராமி புகார் சொல்ல  அபிக்கு ஆதரவாக சொர்ணாக்கா வனிதாவுக்கும் மீராவுக்கும் பெரும் போரே நடந்தது. இதனை அடுத்து நேற்று திடீரென வனிதாவுடன் மீரா சமாதனம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து மதுமிதாவை கலாய்த்து வந்தனர். இந்நிலையில் நேற்றைய எவிக்சனிலும் இருவருமே மதுமிதாவை எதிர்த்து ஓட்டளித்தனர். ஆனால் அபிராமியோ, பழைய எதிரியான மீராவுக்கு எதிராக ஓட்டு போட்டார். இதனால் அதிர்ச்சியான வனிதா நேற்றே புகைச்சலை கிளப்பினார். 

அதே மேட்டர் இன்று வெளியான ப்ரோமோவில் 'நீ திடீர்ன்னு நல்லவள் ஆயிட்டியா? என்ன விளையாடிறியா? என்று வனிதா கேட்க, இதனால் அதிர்ச்சி அடைந்த அபிராமி, தனியாக சென்று 'என்னை விட்டுவிடுங்கள் நான் வீட்டுக்கு போகணும் என கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இந்த அழுகையைப் பார்த்த நெட்டிசன்ஸ் சொர்ணாக்கா வனிதா கேட்டதில் தப்பே இல்ல என சப்போர்ட் செய்கின்றனர். என்னம்மா அபி விளையாடிறியா? 

பிக்பாஸ்  வீட்டில் 16 கலந்துகொண்ட இந்த சீசனில் மிஸ் சென்சேஷனல் மீரா எண்ட்ரியான நாளிலிருந்தே பற்றி எரிகிறது. முதலில் அபி, சாக்ஷி,வனிதா, ஷெரின் மற்றும் மதுமிதா மீராவை கார்னர் செய்தனர். சில நாட்களில் அப்படியே அவங்க டார்க்கெட்  மதுமிதா மீது திரும்பியது. ஒரே ஜாங்கிரி கேட்ட ஒரே கேள்வியால் வீடே வெடித்து சிதறியது. அதன் பின் நடந்த அட்டூழியங்களால்  மக்களின் பேராதரவை பெற்று 10 கோடிக்கும் மேல ஓட்டுக்களை பெற்று எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார் ஜாங்கிரி மது. 


 
ஆக அடுத்தது மீரா தான் வெளியேறுவார் என சூழ்நிலை இருந்த பட்சத்தில், மீரா அல்லது சாக்ஷி வெளியேறினால் சுவாரஷ்யம் இல்லாமல் போய்விடும், ஆக ஆண்டவர்  தீர்ப்ப மாத்தி சொல்லப்போறாராம், ஆமாம் இந்த சீசனில் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்த பாத்திமா பாபு முதலாவது ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளதாக  தகவல் கிடைத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல் சாதுவாக இருந்த பாத்திமா பாபுவால் எந்த பயனும் இல்லை இல்லை. அவர் நல்லவராக நடந்து கொள்வதால் டிஆர்பி ஏறப்போவதில்லை, இதனால் முதலாவதாக பாத்திமாவை வெளியே அனுப்பவுள்ளார்களாம். வெச பாட்டில் சாக்ஷிய அனுப்புவாங்கன்னு பார்த்தா இப்படி சாதுவ அனுப்பராய்ங்களே...