பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். “பாலிவுட்டின் பாட்ஷா”, “கிங் கான்”,  “கிங் ஆஃப் ரொமான்ஸ்” என  ரசிகர்கள் இவருக்கு பல பட்டப்பெயர்களை வைத்து அழைக்கின்றனர். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாக திரையுலகில் கால் பதித்த ஷாருக்கான், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு தற்போது இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.   1992ல், பாலிவுட்டில், ‘டர்’ என்ற திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் அறிமுகமான அவர், மெல்ல நகர்ந்து, ஹீரோ என்ற அந்தஸ்தை கைப்பற்றி தற்போது சூப்பர் ஸ்டார் இமேஜில் ஜொலிக்கிறார். 

 

இதையும் படிங்க: “வனிதாவை பச்சை பச்சையாக கிழிக்க காரணம் இதுதான்”... போலீசை கண்டும் அஞ்சாத சூர்யா தேவியின் அடுத்த வீடியோ...!

அப்படிப்பட்ட ஷாருக்கானையே ஒரு இயக்குநர் கையில் கல்லை எடுத்துக்கொண்டு துரத்தினார் என்றால் உங்களால் நம்ம முடியுமா?. ஆம்.. ஷாருக்கானுக்கு முதன் முதலில் சின்னத்திரையில் வாய்ப்பளித்தவர் மறைந்த இயக்குநர் கர்னல் ராஜ் கபூர், அவர் இறப்பதற்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், ஃபவ்ஜி தொடரில் கமாண்டோவாக நடிக்க ஆள் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது தான் ஷாருக்கான் என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்தார். அந்த கேரக்டரை தனக்கு கொடுக்குமாறு கேட்டார். நான் கமாண்டோவாக சிறப்பாக நடிப்பேன் என வாக்குறுதி கொடுத்தார். சரியேன அவரை நடிக்க வைத்தேன். 

 

இதையும் படிங்க: நடிகர் சூர்யா கொஞ்சி விளையாடிய குட்டி பாப்பாவா இது?... குட்டை உடையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் கவர்ச்சி!

அந்த தொடரின் ஹீரோ ஷாருக்கான் கிடையாது, ஆனால் அவர் அனைவராலும் கவனிக்கப்பட்டார். பலருக்கும் ஷாருக்கான் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. என்றுமே அவர் ஷூட்டிங்கிற்கு தாமதமாக தான் வருவார். அப்படி ஒருநாள் அவர் படப்பிடிப்பிற்கு தாமதாக வந்ததால் கோபமான நான் கல்லை எடுத்துக்கொண்டு துரத்தினேன். ஷூட்டிங்கிற்கு இனி லேட்டாக வரக்கூடாது என்பதற்காக அப்படி செய்தேன். மறுநாளில் இருந்து ஷாருக்கான் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வந்துவிட ஆரம்பித்தார் என தெரிவித்துள்ளார். இன்று வரை ஷாருக்கான் ஷூட்டிங்கிற்கு தாமதமாக தான் வருவார் என்ற பேச்சு பாலிவுட்டில் நிலவுவது குறிப்பிடத்தக்கது.