பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் வைத்திருக்கும் பல சொகுசு கார்களில் முக்கியமானது, அவர் அடிக்கடி பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற கார்
பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் விளம்பரங்கள் டிவியில் வருவதில்லை, காரணம் அந்த காரை விலை கொடுத்து வாங்குபவர்கள் யாரும் டிவி பார்ப்பதில்லை. இப்படி பல விஷயங்களை நமது வாழ்க்கையில் நாம் கடந்து வந்திருப்போம், நமது சிறுவயது முதலேயே ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி பல விஷயங்களை அறிந்திருப்போம்.
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் வைத்திருக்கும் பல சொகுசு கார்களில் முக்கியமானது அவர் அடிக்கடி பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற கார். இந்த கார் கடந்த 2018ம் ஆண்டு வெளியிடப்பட்டது, அப்போதே இந்திய சந்தையில் இதன் விலை சுமார் 6.95 கோடி. சரி சுமார் 7 கோடி கொடுத்து இந்த காரை ஏன் வாங்க வேண்டும்? அதில் அப்படி என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளது?. வாருங்கள் சற்று விரிவாக பார்க்கலாம்.
ABS : பொதுவாக இந்த ABS எனப்படும் Anti-Lock Braking System அனைத்து வகை ஆடம்பர கார்களிலும் இணைக்கப்பட்டிருக்கும். அது இந்த காரிலும் உள்ளது. நீங்கள் பிரேக் போடும்போது சக்கரங்கள் லாக் ஆவதை ஏபிஎஸ் தடுக்கிறது. பிரேக்குகள் பயன்படுத்தப்படும்போது வாகனத்தை கட்டுப்படுத்த அல்லது 'ஸ்டீயர்' செய்ய இது உங்களுக்கு வழி வகுக்கிறது.
இதையும் படியுங்கள் : நயன்தாராவின் 'ஜவான்' பட லுக் லீக்! ஹாலிவுட் நாயகி ரேஞ்சில் தெறிக்கவிடும் லேடி சூப்பர் ஸ்டார்!
Stability Control : அதாவது வண்டியின் நிலைத்தன்மையை கட்டுக்குள் வைத்திருக்கும் திறன். வண்டி கட்டுப்பாட்டை இழக்கும் அளவிற்கு வேகமெடுத்தால், தானாகவே என்ஜினின் வேகத்தை குறைக்கும் திறன் இந்த காரில் உண்டு.
Airbags : பொதுவாக இது எல்லா மாடல் கார்களிலும் தற்போது விபத்துகளில் இருந்து காத்துக்கொள்ள பொருத்தப்படுகிறது, ஆனால் இதில் உள்ள airbags பிற கார்களை ஒப்பிடும்போது அதிக திறன் கொண்டது. அதே போல இந்த கார்களில் மேல்புறத்திலும், பயணிகளின் முட்டிப்பகுதியிலும் கூட airbags பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Pretensioners : இவற்றை Seat Belt Pretensioners என்று அழைப்பார்கள், கார் எதிர்பாராதவிதமாக மோதினால், இவை சட்டென்று செயல்பட்டு, பயணி முன்னோக்கி சென்று அடிபடாமல் தவிர்க்கவல்லது.
Security System : 7 கோடி மதிப்புள்ள காரில் நிச்சயம் பாதுகாப்பு என்பது ஒரு படி மேலே தான் இருக்கும். அந்த வகையில் இந்த வண்டியை போலியான சாவிகள் போட்டு திறப்பது என்பது கனவிலும் நடக்காத ஒன்று. இந்த வாகனத்தை உருவாக்கும்போதே செய்யப்படும் சாவியை தவிர வேறு சாவிகளை போலியாக, எவ்வளவு நேர்த்தியாக செய்து போட்டாலும் இந்த வண்டியின் என்ஜின் இயங்காது.
இன்னும் பல சிறப்பு அம்சங்கள் இந்த காரில் உண்டு, அப்படி ஒரு காரை தான் நம்ம பாலிவுட் பாஷா ஷாருக் கான் பயன்படுத்தி வருகின்றார்.
இதையும் படியுங்கள் : தலைவருடன் தாராள கவர்ச்சி.. இறங்கி குத்தும் தமன்னா - 'காவாலா' லிரிக்கல் பாடல் வெளியானது!
