serial actress turn to move heroine

சின்னத்திரை சீரியல் மூலம், ரசிகர்கள் மனதைக் கொள்ளைகொண்ட நடிகைகள், தற்போது வெள்ளித்திரையில் சிறந்த கதை, திறமையான இயக்குனர் படங்களில் நடிக்க உடனே ஓகே சொல்லி விடுகின்றனர்.

அந்த வகையில், 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் நடித்த நடிகை பிரியா பவானி சங்கர், 'மேயாத மான்' படத்தில் நடித்தார். இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது கார்த்தியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இவரை தொடர்ந்து தற்போது 'தெய்வமகள்' சீரியல் மூலம் பிரபலமான ஊட்டி பொண்ணு வாணி போஜன் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். 

இவர் 'என்.எச்4' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை லோகேஷ்குமார் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே 'என் பெயர் மகிழ்வன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆண் ஓரின சேர்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் இதுவரை மூன்று விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

லோகேஷ்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் நடிப்பதை வாணி போஜன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.