மனசு மம்தா என்ற சீரியலில் மூலம் பிரபலமானவர் தெலுங்கு சீரியல் நடிகை ஸ்ரவாணி. ஐதராபாத்தின் எசார் நகர் பி.எஸ்.யில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்து வந்த ஸ்ரவாணி, நேற்று இரவு 9-10 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார். 

நடிகை ஸ்ரவாணியின் தற்கொலையால் தெலுங்கு சின்னத்திரை வட்டாரமும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகை தற்கொலைக்கு காரணம் டிக்டாக் பிரபலமான தேவராஜ்தான் என நடிகையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஸ்ரவாணிக்கும், தேவராஜ்க்கும் இடையே டிக்-டாக் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் டிக்-டாக்கில் ஒன்றாக சேர்ந்து காதல் பாடல்களுக்கு டூயட் பாடியுள்ளனர். டிக்-டாக்கில் அறிமுகமான நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் பல சமயங்களில் தனிமையில் சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது. 

 

இதையும் படிங்க: ‘ஆசை’ படத்தில் அஜித்திற்கு பதிலாக நடிக்கவிருந்தது இவர் தானாம்?... நல்ல வாய்ப்பை இப்படி நழுவவிட்டுட்டாரே...!

ஆனால் இடையில் ஸ்ரவாணிக்கும் தேவராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில் தேவராஜ், சீரியல் நடிகையை தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் ஸ்ரவாணிக்கு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீசாரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.