கவின், தர்ஷனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான முகென் ராவ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியாகியது.

மேலும் செய்திகள்: தன் தந்தை கொரோனாவால் இறக்கவில்லை! நடிகர் விஜய் வசந்த் கூறிய உருக்கமான தகவல்!
 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடியவர் மலேசியாவைச் சேர்ந்த தமிழர் முகென் ராவ். எந்த பிரச்சனைக்கும் போகாமல் ஏகப்பட்ட ரசிகர்களை சேர்த்து வைத்தார். கவின் தான் எப்படியும் டைட்டில் வின்னராக வருவார் என அனைவரும் காத்திருந்த நேரத்தில் லாஸ்லியா விவகாரத்தால் அவர் வெளியேற, முகென் ராவ்விற்கு அடித்தது ஜாக்பாட். 

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு கவின், லாஸ்லியா, தர்ஷன், சாக்‌ஷி அகர்வால் ஆகியோருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதேபோல் முகெனையும் வெள்ளித்திரையில் காண வேண்டுமென அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இசை மீது ஆர்வம் கொண்ட முகென் ராவ் அதில் கவனம் செலுத்தாமல் மியூசிக்கில் ஆர்வம் காட்டி வருகிறார். அவருடைய பாடல்களை கேட்க என தனி ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் பட்டாளம் காத்துக்கிடக்கிறது. 

மேலும் செய்திகள்: நயன்தாராவை பார்த்து பொறாமையில் பொசுங்கும் சமந்தா? கோடிகளை ஏற்றி தயாரிப்பாளரை கிறுகிறுக்க வைக்கிறாராம்!
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு மலேசியா சென்றுவிட்ட முகென், அங்கு தனது மியூசிக் வேலைகளில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு மலேசியா சென்றுவிட்ட முகென், அங்கு தனது மியூசிக் வேலைகளில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

மேலும் செய்திகள்: ஜோதிகாவுடன் நடித்த குழந்தை நட்சத்திரம் அவந்திகா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? லேட்டஸ்ட் போட்டோஸ்
 

முகென் ராவ்வுக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷ் உடன் பேச்சுலர் படத்தில்  நடித்த திவ்ய பாரதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக, தற்போது ஓவர் கவர்ச்சியில் ரசிகர்களை உசுப்பேற்றி வரும், சீரியல் நடிகை ஷிவானி நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

மேலும் செய்திகள்: நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா... உள்ளிட்ட டாப் 7 நடிகைகள் மேக்அப் இல்லாமல் இருக்கும் புகைப்பட தொகுப்பு!
 

இதை பார்த்து கடுப்பான முகென் ராவ், இது வெறும் வதந்தி என்றும், படம் குறித்த தகவல்களை நேரடியாக தெரிவிக்கிறேன், உங்களுடைய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என விளக்கம் கொடுத்துள்ளார்.